southwest monsoon rain wil hit TN in 3 days

வழக்கமாக தென் மேற்கு பருவமழை கேரள மாநிலத்தில் ஜூன் 1-ந்தேதி தொடங்கும். ஆனால், கடந்த 2011ம் ஆண்டுக்குப் பின் பருவ மழை பொய்த்து, சுமாரான மழையாகவே இருந்தது. இதனால், தென் மேற்கு பருவ மழையை நம்பி இருந்த விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

ஏறக்குறைய 6 ஆண்டுகளுக்கு பின், இந்த ஆண்டு 2 நாட்கள் முன்கூட்டியே பருவமழை பெய்து அனைத்து தரப்பு மக்களையும் குளிர்வித்து வருகிறது.

இரண்டு நாட்களுக்கு முன்பாகவே பருவமழை தொடங்கி இருப்பதால், இந்த ஆண்டு வேளாண் உற்பத்தி சிறப்பாக இருக்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் வானிலை ஆய்வுமைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறுகையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.

சென்னையை பொறுத்தவரை வானம் பகுதி நேர மேகமூட்டத்துடன் இருக்கும்.அதிகபட்சம் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் இருக்கும். திருத்தணி - 42 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.சென்னை நுங்கபாக்கம், மீனம்பாக்கம் -42 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது.

மேலும் தமிழகத்தில் 2 நாட்களுக்கு பிறகு வெயில் படிப்படியாக குறையும் எனவும், தமிழகத்தில் இன்னும் 3நாட்களில் தென்மேற்கு பருவ மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.