Asianet News TamilAsianet News Tamil

காட்பாடி அருகே ரயில்வே மேம்பாலத்தில் விரிசல்… 22 ரயில்கள் நாளை ரத்து… அறிவித்தது தெற்கு ரயில்வே!!

காட்பாடி அருகே ரயில்வே பாலத்தில் விரிசல் ஏற்பட்டதால் நாளை 22 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Southern Railway announces 22 trains cancelled tomorrow
Author
Tamilnadu, First Published Dec 24, 2021, 8:43 PM IST

காட்பாடி அருகே ரயில்வே பாலத்தில் விரிசல் ஏற்பட்டதால் நாளை 22 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. வேலுார் மாவட்டம், திருவலத்தில் பொன்னையாற்றின் குறுக்கே, 1865ல், ஆங்கிலேயர் காலத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது. அந்த பாலத்தில் 38, 39வது பில்லர் பகுதியில் விரிசல் ஏற்பட்டது. இதனால் நேற்று மூன்று ரயில்களும், இன்று 23 ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. தற்போது ஒருவழி பாதையாக மாற்றி அனைத்து ரயில்களும் மற்றொரு ரயில்வே பாலத்தில் இயக்கப்படுகின்றன. இதனால் சென்னையிலிருந்து பெங்களூரு, திருவனந்தபுரம், கோவை, ஈரோடு மார்க்கத்தில் செல்லும் ரயில்களும், அதே போல அந்த மார்க்கத்திலிருந்து சென்னைக்கு வரும் ரயில்களும் பல மணி நேரம் தாமதமாக செல்கின்றன. சென்னையிலிருந்து வந்த ரயில்வே ஊழியர்கள் பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சரி செய்து வருகின்றனர். இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், கடந்த மாதம் பொன்னை ஆற்றில் வெள்ளம் கரைபுண்டு ஓடியது. இதனால் பாலத்தின் பில்லர் பகுதியில் தண்ணீர் தேங்கி மண் அரிப்பு ஏற்பட்டதால் விரிசல் ஏற்பட்டுள்ளது.

Southern Railway announces 22 trains cancelled tomorrow

இதற்காக ஜேசிபி இயந்திரம் ஆற்றில் இறக்கி பழுதடைந்த பாலத்தின் பகுதியில் வரும் வெள்ளத்தை தடுத்து வேறு வழியாக திருப்பி விட்டனர். விரிசல் ஏற்பட்ட பகுதியில் 2 ஆயிரம் மணல் மூட்டைகளை அடுக்கி தடுப்புக்கள் ஏற்படுத்தப்பட்டது. இரும்பு சென்டரிங் பொருத்தி விரிசல் ஏற்பட்ட பகுதிகள் இரும்பு பிளேட்டால் சீரமைக்கப்படும். இந்த பணிகள் 10 நாட்கள் நடக்கும். மற்றொரு ரயில்வே மேம்பாலத்தின் உறுதி தன்மையை ஆராய வேண்டியதிருப்பதால் தான் இன்று 23 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. அந்த பாலத்திலும் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. சென்னை கோட்ட ஒருங்கிணைப்பு பொறியாளர் ராம் பிரசாத் ராவ் தலைமையில் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது என்றார். இந்த நிலையில் பாலம் பழுது பார்க்கும் பணிகளை சென்னை கோட்ட மேலாளர் கணேஷ் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திருவலம் ரயில்வே மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்ட இரண்டு பில்லர்கள் போர்க்கால அடிப்படையில் சரி செய்யப்படும். அந்த பாலத்தில் உள்ள 55 பில்லர்களிலும் தண்ணீர் தேங்காமல் பழுது பார்க்கப்பட்டு பாலம் உறுதிப்படுத்தப்படும். இந்த பணிகள் முடிய சில நாட்கள் ஆகும். அதுவரை சென்னையில் இருந்து கோவை, பெங்களூரு மார்க்கத்திலும், சென்னையிலிருந்து வேலுார், ஜோலார்பேட்டை வரை உள்ளூர் மார்க்கத்தில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களும் ரத்து செய்யப்படும் என்றார்.

Southern Railway announces 22 trains cancelled tomorrow

சென்னை- ஜோலார்பேட்டை ஏலகிரி எக்ஸ்பிரஸ், ஜோலார்பேட்டை- சென்னை ஏலகிரி எக்ஸ்பிரஸ், சென்னை கடற்கரை- வேலுார் கன்டோன்மண்ட் யூனிட் ரயில், வேலுார் கன்டோன்மண்ட்- சென்னை கடற்கரை யூனிட் ரயில், அரக்கோணம்- ஜோலார்பேட்டை யூனிட் ரயில், ஜோலார்பேட்டை- அரக்கோணம் யூனிட் ரயில், பெங்களூரு- சென்னை சதாப்தி எக்ஸ்பிரஸ், ரேணிகுண்டா- மைசூர் எக்ஸ்பிரஸ், சென்னை சென்ரல்- கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ், கோவை- சென்னை சென்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ், சென்னை- மங்களூர் சூப்பர் பாஸ்ட், சென்னை- திருவனந்தபுரம் சூப்பர் பாஸ்ட், சென்னை- மங்களூரு வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ், ஜோலார்பேட்டை-சென்னை செகண்ட் ஏலகிரி எக்ஸ்பிரஸ், சென்னை- ஜோலார்பேட்டை செகண்ட் ஏலகிரி எக்ஸ்பிரஸ், வேலுார் கன்ட்டோன்மண்ட்- சென்னை கடற்கரை எக்ஸ்பிரஸ், ஜோலார்பேட்டை- அரக்கோணம் மெமு எக்ஸ்பிரஸ், பெங்களூரு- சென்னை சதாப்தி எக்ஸ்பிரஸ், சென்னை- பெங்களூரு சதாப்தி எக்ஸ்பிரஸ், மைசூர்- ரேணிகுண்டா எக்ஸ்பிரஸ், மைசூர்- சென்னை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், மங்களூரு- சென்னை எக்ஸ்பிரஸ், ரேணிகுண்டா- மைசூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் நாளை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில்சார்- கோவை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் கூடூர், ரேணிகுண்டா, பாகாலா வழியாகவும், டாடா நகர்- எர்ணாகுளம் மெயில் ரயில், கூடூர், ரேணிகுண்டா, பாகாலா, காட்பாடி வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. மைசூர்-சென்னை சென்ரல் சூப்பர் பாஸ்ட் காட்பாடி வரை இயக்கப்படுகின்றது. சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூரு செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ் காட்பாடியில் இருந்து இயக்கப்படுகின்றது.

Follow Us:
Download App:
  • android
  • ios