காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஸ்டெர்லைட் பிரச்சினைகளுக்காக மக்களுக்கு ஆதரவாகப் போராட்டம் நடைபெறும் எனத் தென்னிந்திய நடிகர் சங்கம் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து சில கடந்த சில மாதங்களாக  தொடர் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகிறது. சினிமாதுறையில் கியூப் பிரச்சனை, விவசாயிகளுக்கு காவிரி மேலாண்மை வாரியம், தூத்துக்குடிக்கு ஸ்டெர்லைட் என தமிழகம் பிரச்சனையை தொழில் சுமந்துகொண்டிருக்கிறது.

இந்த நிலையில் நேற்று நடிகர் சங்கம் சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அதில், நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பொன்வண்ணன், செயற்குழு உறுப்பினர்கள் A.L உதயா, விக்னேஷ், பிரேம், M.A.பிரகாஷ், குட்டிபத்மினி, மனோபாலா, ஹேமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பில் சினிமா துறை சம்பந்தமான பிரச்சனைகளை பேசி முடிந்தது. அடுத்ததாக பேசியபோது “காவிரி மேலாண்மை ஸ்டெர்லைட் பிரச்சினைகளுக்காக மக்களுக்கு ஆதரவாக அழுத்தம்தரும் வகையில் விரைவில் அதற்கென ஒரு போராட்டமோ அல்லது உண்ணாவிரதமோ அடுத்த வாரத்தில் அரசாங்கத்திடம் முறைப்படி அனுமதி வாங்கி நடத்தப்படும்” என்று அறிவித்தார்.