கட்டணமின்றி பள்ளி சான்றிதழ் நகல்களை பெறலாம்.. மாணவ, மாணவிகளுக்கு குட் நியூஸ் சொன்ன பள்ளிக்கல்வித்துறை
கட்டணமின்றி பள்ளி சான்றிதழ் நகல்கள் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கனமழை பாதிப்பால் கல்லூரி சான்றிதழ்களை இழந்த நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட மாணவ, மாணவிகள் கட்டணமின்றி சான்றிதழ் நகல்களை பெறலாம் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் பெய்த கொடூர மழையால் தென்மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
உடுத்திய துணி தவிர மாற்று துணிகளுக்கு கூட வழி இல்லாத நிலைமையை வெள்ளம் உருவாக்கியது. வீடுகளில் உள்ள பொருட்கள் அடித்து செல்லப்பட்டும், வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டும் வீணடிக்கப்பட்டு விட்டது. கனமழை பாதிப்பால் கல்லூரி சான்றிதழ்களை இழந்த நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட மாணவ, மாணவிகள் கட்டணமின்றி சான்றிதழ் நகல்களை பெறலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ஏற்கனவே சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஏற்பட்ட புயல் வெள்ள பாதிப்பால் இழந்த சான்றிதழ்களை பெற mycertificates.com என்ற இணையதளம் உருவாக்கப்பட்டது. அதே இணையதளத்தில் தென்மாவட்ட கல்லூரி மாணவர்கள் தங்களது விவரங்களை பதிவு செய்து நகல் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்.. ஓலா ஸ்கூட்டரின் தாறுமாறான அம்சங்கள்..