Social media comments against edappadi palanisamy

வாட்ஸ் அப், முகநூல் , டுவிட்டர் என அனைத்து சமூக வலைதளங்களிலும் கடந்த 2 தினங்களாக ஒட்டுமொத்த எதிர்ப்பையும் ஆளும் அரசின் மீது நிகழ்த்தி வருகின்றனர். கவர்ன்மெண்டின் கட்டணக் கொள்ளையை கலாய்க்கும் பதிவுகள் இதோ...

Selastin Raj

அடிமை அரசு மீது அளவில்லாத வெறுப்பை மக்களிடம் உண்டாக்கி செயல் தலைவரின் கட்சியை செயலிழ‌க்க வைத்து பாபா சாமியாரை ஆட்சி கட்டிலில் ஏற்றி வைக்க பரிவாரங்களின் மாஸ்டர் பிளான் தானோ இந்த பேருந்து கட்டண உயர்வு என்றும் சந்தேகபட வைக்கிறது. மக்கள் இவ்வளவு துன்பபட்டுகொண்டிருக்கும் போது பைத்தியகார ஆட்சியாளன் தவிர வேறு எவனும் இப்படி ஒரு பாரசுமையை மக்கள் மீது திணிக்கமாட்டான்.

Arun Bhagath

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்துக்கு மக்களிடையே பலத்த ஆதரவு உருவானது.

இப்போது அதற்கு செக் வைக்கும் விதமாக கட்டண உயர்வு என்ற காய் நகர்த்தலை செய்திருக்கிறது அரசு. தொழிலாளர்கள் எங்களை நிர்பந்திப்பதால் இந்த கட்டண உயர்வு என்ற உளவியலை மக்களிடம் உருவாக்க முயற்சிக்கிறது அரசு.

நடராசன்

பேருந்து கொள்ளை கட்டண உயர்வை எதிர்த்து திருப்பூரில் திரளாக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து பேருந்துகளை சிறை பிடிப்பு..சாலை மறியல். மாணவர் போராட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் பரவுகிறது.. மாணவர்களை பொதுமக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், வணிகர்கள், படைப்பாளிகள் வாழ்த்துவோம் அவர்களுடன் இணைவோம்..உதவுவோம்!

Vettri Murasu

வருவாய் என்றால் என்னவென்றே தெரியாத தமிழ அரசின் பல துறைகளுக்கு பட்ஜெட்டில் ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யும் தமிழகத்தை ஆட்சி செய்யும் திராவிட கட்சிகள் போக்குவரத்துக் கழகங்களுக்கு மட்டும் பட்ஜெட்டில் சொற்ப அளவில் ஒதுக்கீடு செய்வது ஏன்? மேலும் இந்த துறையை அரசின் மற்ற துறைகளைப் போல் முழுமையான அரசு துறையாக மாற்றினால் தான் நல்ல தீர்வு கிடைக்கும் மக்களுக்கு!

Paramasivam S

1980-களில் போக்குவரத்துகழகங்களில் இந்தஅளவுக்கு அளவுக்கதிகமான அதிகாரிகள் இல்லை.அக்காலகட்டத்தில் குறைந்தபட்ச பேருந்துகட்டணம் இருபத்திஐந்து பைசா. அப்போது போக்குவரத்து கழகத்திலிருந்து சூப்பர் டாக்ஸ் செலுத்தப்பட்டது!!!

Ayyanar Raju

அராஜக அரசு:

போக்குவரத்து ஊழியர்களின் சம்பளம் போதுமானதாக இல்லை என்றால் வேறு வேலைக்கு செல்லுங்கள் என்று சொல்வது எவ்வளவு பெரிய ஆதிக்க மனப்போக்கு.. இரவுபகல் பாராமல் கண்விழித்து, பண்டிகை நாட்களிலும் , அரசு விடுமுறை நாட்களிலும் பேருந்தை ஓட்டும் ஓட்டுனர்களுக்கு அரசு தரும் சம்பளம் வெறும் 17000.

இதிலும் பென்சன் சரியாக வருவதில்லை. நிலுவைதொகை தரவில்லை என்ற குற்றச்சாட்டுகள் நீள்கிறது.. உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற, தலைமை நீதிபதிகளுக்கு சுமார் 130000 ரூபாய் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் விளைவால்தான் போக்குவரத்து ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்த இயலவில்லை என்றும் கூறப்படுகிறது. இதிலும் ஓட்டுநரையும் நடத்துனரையும் நாம் எந்த அளவிற்கு மதிக்கிறோம் என்று நம் மனசாட்சிற்கே தெரியும்.

ஏறக்குறைய 10 ஆண்டுகால போராட்டம்; கடந்த சில வருடங்களாக தொடர்ந்து கண்டன ஆர்பாட்டம்,கவன ஈர்ப்பு ஆர்பாட்டம், ஒருநாள் உண்ணாவிரதம், அடையாள உண்ணாவிரதம் என்று எவ்வளவோ முயன்றும் அரசு செவிசாய்க்க மறுத்ததின் விளைவுதான் இவ்வளவு பெரிய போராட்டம்…. அவர்களை 10 ஆண்டுகளாக போராட விட்டது யார் தவறு? ஆரம்பத்திலேயே அழைத்து பேசாமல் விட்டது யார் ?? ஊழியர்களுக்கு சேர வேண்டிய 7000 கோடிக்கு யார் பொறுப்பாவது??

வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் கடும் அவதி..பொது மக்கள் பொதுமக்கள் பொது மக்கள்… யாரிந்த பொதுமக்கள் நெல்லை தீக்குளிப்பின் போது ஒதுங்கி நின்றவர்கள்? ஹைட்ரோ கார்பன் முதற்கொண்டு நெடுவாசல் வரை எல்லா போராட்டங்களையும் கண்டும் காணாமல் கடந்து சென்றவர்கள்.. அனிதா மரணத்திற்கு காரணம் தேடியவர்கள்: மணல் கொள்ளைக்கு துணை போகிறவர்கள்; ஓட்டுக்கு காசு வாங்கி அதை நியாயப்படுத்த நீட்டி முழங்குபவர்கள்.
மீனவனின் பிணங்கள் கடலில் மிதந்தபோது அலுவலகம் சென்றவர்கள்.

கூத்தாடிகளுக்கு பால்வார்ப்பவர்கள்.. நாட்டில் என்ன கொடுமை நடந்தாலும் வேடிக்கை பார்த்தே பழகிபோன பொதுமக்கள்…

இப்போது நடுரோட்டில் நிற்கவும் பழகி கொள்ளட்டும். ஏனெனில் இனிமேல் இவர்கள் அங்குதான் வாழவேண்டிய நிலை வரும்… முன்னறிவிப்பு இன்றி ஸ்டிரைக் செய்வதா என கொந்தளிப்போரே!

திடீரென்று நள்ளிரவில் பேருந்துகட்டணம் சொல்லிவிட்டா உயர்த்தப்பட்டது/ பெட்ரோல் விலையை சொல்லிவிட்டா உயர்த்தினார்கள்/1000,500 ரூபாய் சொல்லிவிட்டா செல்லாமற்போனது/ இதையெல்லாம் கண்டும் காணாத பொதுஜனம் தனக்கொரு பிரச்சனை என்றவுடன் கண்டும் காணமலிருக்கலாமே.

ஓட்டுநர், நடத்துனர்களுக்கு குடும்பம் இல்லையா, மனைவி பிள்ளை இல்லையா, அவர்களெல்லாம் பொது மக்கள் இல்லையா.. ஓட்டுநர் இல்லையென்றால் பிற ஓட்டுநர்களை வைத்து வாகனம் ஓட்ட அனுமதிக்கிற அரசு; இதையே ஆசிரியர் போராட்டத்தின் பொதும்; வழக்கறிஞர் போராட்டத்தின்போதும் செய்ய இயலுமா? எங்கு போராட்டம் என்றாலும் முதலில் உடைக்கப்படுவது அரசு பேருந்துதானே; சாலை மறியல் போதும், அடிதடி கலவரம் என எது நேர்ந்தாலும் நேர்தியாக பாதிக்கப்படுபவன் ஓட்டுநரும் நடத்துனரும்தான் என்பதை மறுக்க இயலுமா?…..

போக்குவரத்து ஊழியர்கள் சம்பளம் போதவில்லை என்றால் வேறு வேலைக்கு போகசொல்லி சொல்பவர்கள்தான் குற்றம்/லஞ்ச வழக்குகளில் ஏற்கனவே வழக்கை சந்தித்துள்ள நீதித்துறையினர்.. ஏன் MLA க்கள் சம்பள உயர்வு கேட்டபோது இப்படி சொல்ல கூடிய ஆண்மை இருந்ததா இந்த நீதித்துறைக்கு.

சம்பளத்துக்கு வேலை செய்யும் நீதிபதிகளுக்கு இவ்வளவு வாய்கொழுப்பு அதிகம்தான்…. ஏதோ நீதியை கட்டிகாப்பதை போல் பீய்த்துக்கொள்ளும் இவர்கள்; சொல்லியும் காவேரியில் தண்ணீர் வரவில்லை, என்ன செய்தது நீதிதுறை?கோடிகோடியாய் கொள்ளையடிப்போருக்கு துணைபோகும் நீதிதுறைஉழைக்கும் வர்க்கத்தை இழிசெய்ய தகுதியே இல்லை.

போக்குவரத்து ஊழியர்களுக்கு கைகொடுப்போம்…
ஆண்மையற்ற அரசை கிழித்தெறிவோம்;,,,

பிரவீன்

தமிழக மக்கள் மீது அதிமுக கொள்ளைக் கூட்டம் எடப்பாடி கும்பல் வீசிய கொத்துக் குண்டு பேருந்து கட்டண உயர்வு!

போக்குவரத்து தொழிலாளர்களே!

திருடிய பணத்தை திருப்பி கேட்டு தொழிலாளர்கள் போராடினால் உடனே மக்களிடம் திருட முயற்சிக்கிறது எடப்பாடி கும்பல்.

மக்களிடம் டிக்கெட் வாங்காதீர்கள், வேலை நிறுத்தத்தை அறிவியுங்கள் தொடருங்கள்

உழைக்கும் மக்களே!

கல்வி, குடிநீர், மருத்துவம், விவசாயம் என அனைத்திற்கும் மானியத்தை வெட்டி மக்களை கொல்லும் பயங்கரவாத அரசு தான் போக்குவரத்து தொழிலாளிகளின்
பணத்தை தர மறுத்து அவர்களையும் கொல்லுகிறது.

அரசு பேருந்துகளை தனியார்மயமாகுவதன் ஒரு பகுதியே பேருந்து கட்டண உயர்வு பேருந்துகளில் கட்டணம் செலுத்த மறுப்போம்!

மக்கள் விரோத ஓட்டுப் பொறிக்கி கட்சிகளைப் புறக்கணித்து, புரட்சிகர பாதையில் போர்குணமிக்க போராட்டங்களை முன்னெடுப்போம்!

பஸ் பயணக்கடன் அளிக்கப்படும்னு கொஞ்ச நாள்ள பேங்க்ல திட்டம் அறிமுகபடுத்த ஆரம்பிச்சுருவாங்க #பேருந்துகட்டணஉயர்வு

தமிழக மக்களுக்கு புரட்சி தலைவி அம்மா இழப்பு கசப்பானதிலிருந்து, இன்னும் அதைவிட கசப்பான அனுபவங்களைத்தானே கொடுத்து கொண்டிருக்காங்கும் தமிழக அரசுக்கு தேர்தல் வந்தால் மக்கள் கொடுப்பாங்க கசப்பான தோல்வி மருந்து ! உலகம் உருண்டை மறக்க வேணாம் மத்திய அடிமைகளே!! #busfare#பேருந்துகட்டணஉயர்வு

தமிழக மக்களுக்கு புரட்சி தலைவி அம்மா இழப்பு கசப்பானதிலிருந்து இன்னும் அதைவிட கசப்பான அனுபவங்களைத்தானே கொடுத்து கொண்டிருக்கீங்க!! தேர்தல் வந்தால் தெரியும் உங்களுக்கு கசப்பான தோல்வி அனுபவங்கள்! உலகம் உருண்டை மறக்க வேணாம் மத்திய அடிமைகளே!! #busfare#பேருந்துகட்டணஉயர்வு

பஸ் டிக்கெட் இன்னும் 100ஓவாக்கூட ஏத்திக்கோங்க., நாங்க தாங்கிக்கிறோம். ஆனா அவதாரத்த இன்னொரு அவதாரம் மட்டும் எடுக்க விடாதிங்க, நாங்களும் தாங்க மாட்டோம் #நாடும்_தாங்காது

#பேருந்துகட்டணஉயர்வு ‘வை மற்ற மாநில கட்டணத்தோடு ஒப்பீடு காட்டிய தமிழக அரசு! அதேபோல் மற்ற மாநில MLA சம்பளத்தையும் ஒப்பீடு காட்டலாமே?

துத்துக்குடிமாவட்டம்(அமைச்சர் கடம்பூர் ராஜூ தொகுதி) கோவில்பட்டியில் அரசு போக்குவரத்துகழக #பஸ்கட்டண_உயர்வு டன் பொதுமக்களுக்கு உடற்பயிற்ச்சியும் யோகாவும் இலவசமாக கற்றுத்தரும் கோவில்பட்டி போக்குவரத்துகழக மேலாளருக்கு தமிழகத்திலே சிறந்த நிர்வாகி என்ற பட்டமும் வெகுமதியும் வழங்கவேண்டும்

திராவிட கட்சிகள் நல்லா உங்கள தொரத்தி அடிக்கிறான் ஓடு ஓடு..பஸ் கட்டணம் உயர்ந்தா என்னடா உங்களுக்கு அதான் #2000 ஓவா முள்ளங்கி கொத்தா வாங்குனல நடந்து போங்கடா..போராட்டம் பண்ணி மயிர கூட புடுங்க முடியாது ஓடு..ஓடு..அடுத்து ரேஷன் கடை தான். #பஸ்கட்டண_உயர்வு

மக்கள் கஷ்டப்பட்டா கவர்மெண்ட் உதவிகள் செய்யும் எதையும சமாளிக்க முடியாமல் மக்களிடம் எடுத்துக் கொள்பவர்களே கவர்மெண்டாக இருக்கிறார்கள் #பஸ்கட்டண_உயர்வு

"சிறந்த சேவையைத் தொடர்ந்து வழங்க பேருந்து கட்டண உயர்வைத் தவிர்க்க முடியவில்லை" #எடப்பாடிபழனிசாமி அரசு சிறந்த சேவையை வழங்கிகொண்டிருக்கும் போது.... #பேருந்துகட்டணஉயர்வு#பஸ்கட்டண_உயர்வு