So far 33 percent of the trees cimaikkaruvela Edappadi akarriyaccam collector proud

சேலம்

எடப்பாடியில் இதுவரை 33 சதவீதம் சீமைக்கருவேல மரங்கள் அகற்றியாயிற்று என்று ஆட்சியர் சம்பத் பெருமிதத்தோடு தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடியில் சீமை கருவேலமரங்கள் அகற்றப்படுவதை நேற்று ஆட்சியர் சம்பத் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில் சங்ககிரி உதவி ஆட்சியர் பால்பிரின்ஸிலி ராஜ்குமார், தாசில்தார் சண்முகவள்ளி ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது ஆட்சியர் சம்பத் கூறியது:

“வருவாய்த்துறை, பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சித்துறை, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகிய துறைகளை ஒருங்கிணைந்து சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

தனியார் நிலங்களில் உள்ள சீமைகருவேல மரங்களை அகற்றுவதற்கு குறிப்பாணைகள் வழங்கப்பட்டு அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சீமை கருவேல மரங்களை அகற்றியது குறித்த அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் இதுவரை 33 சதவீதம் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளது.

மக்கள் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டார்” ஆட்சியர் சம்பத்.