Asianet News TamilAsianet News Tamil

விரைவில் சிவாஜி சிலை அகற்றப்படும் - தமிழக அரசு உறுதி

sivaji statue-in-marina
Author
First Published Jan 3, 2017, 1:16 PM IST


கடந்த 2006 -2011ம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் நடிகர் சிவாஜியின் உருவ சிலை சென்னை காமராஜர் சாலையில் அமைக்கப்பட்டது. இந்த சிலை மும்முனை சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ளதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக புகார் கூறப்பட்டது.

இதையடுத்து தமிழக அரசு அந்த சிலையை அகற்ற வேண்டும் என எதிர்க்கட்சிகள் தெரிவித்தனர். ஆனால், சிலை அகற்றவில்லை. இதையடுத்து கடந்த 2011ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு, சிவாஜி சிலையை அகற்ற உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழக அரசு மற்றும் மாநில நெடுஞ்சாலை துறைக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், நெடுஞ்சாலை துறை சார்பில் எவ்வித பதிலும் இல்லை. அரசு தரப்பில், அவகாசம் கோரப்பட்டது. இதனால் நெடுஞ்சாலைதுறை செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்தது.

sivaji statue-in-marina

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் கூறியிருப்பதாவது, வேறு இடத்தில் சிவாஜி சிலையை இட மாற்றம் செய்வதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. வரும் மே 18ம் தேதிக்குள் மெரினா கடற்கரை சாலையில் உள்ள சிவாஜி சிலை இட மாற்றம் செய்யப்படும் என்று கூறியது.

sivaji statue-in-marina

இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறை செயலாளர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மெரினா கடற்கரை சாலையில் உள்ள சிவாஜி சிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சீனிவாசன் என்பவர் 2006ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios