சிவகங்கை 

சிவகங்கை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பேரூராட்சி அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இந்த  ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியச் செயலர் ஆண்டி தலைமை வகித்தார். 

கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கத்தின் மாவட்டச் செயலர் ஆறுமுகம், மாவட்டப் பொருளாளர் வீரபாண்டி, மாவட்டத் தலைவர் ஜெயராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலர் பாலசுப்பிரமணியன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் முனியராஜ்,விஜயகுமார், மானாமதுரை ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வெள்ளமுத்து, ராஜாராம், முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் பேசினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், "சிவகங்கை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் 

குடிநீர்த் தட்டுப்பாட்டை தீர்க்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.

100 நாள் வேலைத் திட்டத்தில் தினக் கூலியாக ரூ. 208 வழங்க வேண்டும். 

2016 - 17 பயிர்க் காப்பீடு நிலுவைத் தொகை வழங்க வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் தங்கள்து கோரிக்கைகளை வலியுறுத்தி  முழக்கங்களை எழுப்பினர்.