கள்ளக்காதல் விவகாரத்தை கண்டித்து கணவருடன் வாழ சொன்னதால், கூட பிறந்த அக்கா, மற்றும் அக்கா கணவரையே தங்கை கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மயிலாப்பூரை சேர்ந்த பூ வியாபாரி தர்மலிங்கம், இவருடைய மனைவி மீனாட்சி. இவர்கள் இருவரும் அதே பகுதியில் பூக்கடை நடத்தி வந்துள்ளனர். 

இந்நிலையில், மீனாட்சியின் தங்கை மைதிலி தன்னுடைய கணவர் பிரவீன் மற்றும் குழந்தைகளை மறந்து, அந்த பகுதில் வசிக்கும் பாலமுருகன் என்பவருடன் தகாத உறவில் இருந்துள்ளார். இதனால் மைதிலியை பல முறை அக்கா மீனாட்சி மற்றும் அக்காவின் கணவர் தர்மலிங்கம் ஆகியோர் கண்டித்து, பிரவீனுடன் சேர்ந்து வாழும் படி அறிவுரை கூறியுள்ளனர். 

ஆனால் மைதிலி கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் இவர்களை கொலை செய்ய முடிவு செய்தார். அதனால் கள்ளக்காதலன் பால முருகனிடம் கூறி மெல்ல கொள்ளும் 'Slow poision' வாங்கி வர சொல்லி தர்மலிங்கத்திற்கு மதுவிலும், அக்கா மீனாட்சிக்கு உணவிலும் கலந்து கொடுத்துள்ளார்.

இதைதொடர்ந்து சில நாட்களில் தர்மலிங்கம் மற்றும் மீனாட்சி இருவருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இருவருக்கும் மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி தர்மலிங்கம் ஜனவரி 9ஆம் தேதியும், மீனாட்சி 13ஆம் தேதியும் அடுத்தடுத்து உயிர் இழந்தனர். 

மேலும் இவர்கள் இருவரின் உடற்கூறு ஆய்வறிக்கையில் இருவர் உடலிலும் விஷம் கலந்திருந்தது உறுதி செய்யப்பட்டது. 

இதையடுத்து, தர்மலிங்கத்தின் சகோதரர் குமார், என்பவர் இவர்கள் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். 

இந்த விசாரணையில் தர்மலிங்கம் மற்றும் மீனாட்சி மருத்துவ செலவிற்காக பணம் வேண்டும் என மைதிலி காசோலையில் கையெழுத்து வாங்கி, அவர்களின் வங்கி கணக்கில் இருந்து 17 லட்சம் ரூபாய் வங்கியில் இருந்து எடுத்தது தெரியவந்தது. 

மருத்துவ செலவிற்காக குறைவான பணத்தை மட்டுமே செலவு செய்து விட்டு மற்ற தொகையை அவரே வைத்துக்கொண்டதும் தெரியவந்தது. 

இதனால் போலீசாருக்கு மைதிலி மீது சந்தேகம் வலுத்தது. இதனால் விசாரணை செய்தபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். பின் போலீசார் துருவி துருவி விசாரணை செய்தபோது மைதிலி 'slow poison' கொடுத்ததை ஒப்புக்கொண்டார்.

தற்போது, மயிலாப்பூர் போலீசார், மைதிலி மற்றும் அவருடைய கள்ளக்காதலன் பாலமுருகன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.