வெளிநாட்டு இசை நிகழ்ச்சியின்போது, பாடகி சின்மயி-க்கு வைரமுத்து தரப்பில் இருந்து பாலியல் அழுத்தம் வந்தது உண்மை என்று அவரது அம்மா பத்மாஷினி கூறியுள்ளார். பத்மாஷினியின் இந்த பேச்சால் வைரமுத்து மீதான பிடி மேலும் இறுகுவதாக தோன்றுகிறது. 

பெண் பத்திரிகையாளர் சந்தியா மேனன், தனது டுவிட்டர் பக்கத்தில் தனக்கு 18 வயது இருந்தபோது, வைரமுத்து வீட்டுக்கு சென்றதாகவும் அப்போது அவர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததாகவும் பதிவிட்டிருந்தார். வைரமுத்து இப்படி செய்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்றும் கூறியிருந்த சந்தியா மேனன், அந்த பதிவை டெலிட் பண்ணியிருந்தார். சந்தியா மேனனின் டுவிட்டர் பதிவு டெலிட் செய்யப்படுவதற்கு முன்னரே, பலர ஸ்க்ரீன் ஷாட் எடுத்து ரீ-டுவிட் செய்து வந்தனர். இந்த நிலையில்தான் பாடகி சின்மயி, வைரமுத்து மீத பாலியல் குற்றச்சாட்டை ஒன்றை சுமத்தியுள்ளார்.

 

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், இசை நிகழ்ச்சிக்காக சுவிட்சர்லாந்துக்கு சென்றிருந்தோம். நிகழ்ச்சி முடிந்து அனைவரும் சென்ற நிலையில், நானும் என் அம்மாவும் மட்டும்தான் இருந்தோம். அப்போது நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர் என்னிடம் வந்து, கவிஞர் வைரமுத்து, ஓட்டல் ரூமில் வெயிட் பண்ணுகிறார் என்று கூறினார். நான் அப்போதே வைரமுத்துவின் முகத்திரையைக் கிழித்திருப்பேன். இப்போது நான் உண்மையை சொல்வதனால் திரைப்படங்களில் பாடும் வாய்ப்பு மறுக்கப்பட்டாலும் கவலையில்லை என்று டுவிட்டர் பதிவில் ஆவேசமாக கூறியிருந்தார்.

இந்த நிலையில், சின்மயி-ன் குற்றச்சாட்டுக்கு கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில், அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்" என்று பதிவிட்டிருந்தார்.

 

பாடகி சின்மயி-ன் குற்றச்சாட்டுக்கு முதன் முறையாக வாய் திறந்த கவிஞர் வைரமுத்துவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சின்மயி-ன் தாயார் பத்மாஷினி, 2004 ஆம் ஆண்டு வெளிநாட்டு இசை நிகழ்ச்சியின்போது வைரமுத்து தரப்பில் இருந்து தனது மகளுக்கு பாலியல் ரீதியான அழுத்தம் வந்ததாக கூறியுள்ளார். வைரமுத்து இருக்கும் அறைக்கு சின்மயியை தனியாக அனுப்புமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கூறியதாக பத்மாஷினி தெரிவித்துள்ளார். சின்மயி தாயாரின் இந்த பேச்சால், கவிஞர் வைரமுத்துவின் பிடி இறுகுவதாகவே தெரிகிறது.