பட்டுசேலை மீதான 22 சதவீத ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வலியுறுத்தி காஞ்சிபுரம் பட்டுச்சேலை விற்பனையாளர்கள் இன்று கடையடைப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் ஆதரவும், எதிர்ப்பு எழுந்தன.

இந்த நிலையில், பட்டுச்சேலை மீதான 22 சதவீத ஜி.எஸ்டி. வரியை குறைக்க வலியுறுத்தி காஞ்சிபுரம் பட்டுச்சேலை விற்பனையாளர்கள் இன்று கடையடைப்பில் ஈடுபட்டனர். 

காஞ்சிபுரம் பகுதியில் பட்டு நெசவுத் தொழிலில் பல்லாயிரக்கணக்கான நெசவாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையால், பட்டு புடவைகள் மீது 22 சதவீத வரியை அதிகப்படுத்துவதால், பட்டு நெசவு தொழில் அழியும் அபாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது என்றுகின்றனர் பட்டு நெசவு தொழிலாளர்கள்.

மேலும், வியாபாரமும் குறைந்து தற்போது பட்டுநெசவு தொழிலில் நஷ்டம் ஏற்படத் தொடங்கிவிட்டதாகவும் அவர்கள் போர்க்கொடி உயர்த்தயுள்ளனர்.

இன்று நடைபெற்ற போராட்டத்தில், பட்டு கூட்டுறவு சங்கம், பட்டு வியபாரிகள், தரகர்கள் உள்பட அனைத்து வியாபார அமைப்புகளும் பங்கேற்றன.

இந்த போராட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் தலைமையில் காஞ்சிபுரம் தேரடியில் இருந்து மூஞ்கில் மண்டபம் வரை மனிதச் சங்கிலி அமைத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றேன்.