Asianet News TamilAsianet News Tamil

சார்பதிவாளர் அலுவலகம் முற்றுகை; பத்திரபதிவு செய்யாமல் காலை முதல் மாலை வரை இழுத்தடித்ததால் மக்கள் கோபம்..

Siege of the Office of the register Officer People are angry because they did not do it
Siege of the Office of the register Officer People are angry because they did not do it
Author
First Published Jan 31, 2018, 7:10 AM IST


அரியலூர்

அரியலூரில் காலை முதல் மாலை வரை காத்திருந்தும் பத்திரப்பதிவு செய்யாமல் இழுத்தடித்ததால் கோபமடைந்த மக்கள் சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி பகுதியில் சார்பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் சார்பதிவாளராக தனபாலன் (53) பணியாற்றி வருகிறார்.  இந்த அலுவலகத்திற்கு பத்திரப்பதிவு, பதிவு திருமணம், பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற மக்கள் வந்து செல்கின்றனர்.

வழக்கம்போல நேற்று காலையும் சார்பதிவாளர் அலுவலகம் திறக்கப்பட்ட நிலையில் மீன்சுருட்டி அருகே உள்ள நெல்லித்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த பிரபு (30) என்பவர் அலுவலகத்தில் தனது நிலத்தை கிரயம் செய்வதற்கான ஆவணங்களை கொடுத்துள்ளார்.

மேலும், கங்கவடங்க நல்லூரை சேர்ந்த விஜயலட்சுமி (35) தனது பெயரில் பத்திரப்பதிவு செய்வதற்காக ஆவணங்களை கொடுத்துள்ளார்.

கணினியில் பத்திரப்பதிவு செய்ய காலதாமதம் ஆனதால் மாலை 5 மணி வரை பத்திரப்பதிவு நடைபெறவில்லை. அதன்பின்னர், பத்திரப்பதிவு மறுநாள் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

காலையில் இருந்து கால் கடுக்க காத்திருந்தும் வந்த வேளை முடியாமல் ஒரு நாள் முழுவதும் விரயமானதால் ஆத்திரமடைந்த மக்கள் சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், இதுகுறித்து தகவல் அறிந்த மீன்சுருட்டி காவல் உதவி ஆய்வாளர்கள் திவாகர், வசந்த் மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதன்பின்னர் பத்திரப்பதிவு உடனே செய்து கொடுக்கப்படும் என்று உறுதியளித்ததின் பேரில் மக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர்.

பல மணி நேரங்கள் காத்திருந்தும் அதிகாரிகள் வராததால் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்...

Follow Us:
Download App:
  • android
  • ios