முதல்வர் ஸ்டாலினிடம் அதிகாரிகள் அலட்சியத்தை பட்டியல் போட்ட ஸ்ரீமதியின் தாய்.. அடுக்கடுக்கான குற்றச்சாட்டு.
தமிழக முதலமைச்சரை சந்தித்த கள்ளக்குறிச்சி மாணவி சுமதியின் தாய் அவரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் பல சந்தேகங்களை அவர் எழுப்பியுள்ளதுடன், அரசு அதிகாரிகளிட் அலட்சியப் போக்கை பட்டியிலிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:-
தமிழக முதலமைச்சரை சந்தித்த கள்ளக்குறிச்சி மாணவி சுமதியின் தாய் அவரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் பல சந்தேகங்களை அவர் எழுப்பியுள்ளதுடன், அரசு அதிகாரிகளிட் அலட்சியப் போக்கை பட்டியிலிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:-
ஐயா எனது மகள் ஸ்ரீமதி கனியமூர் சக்தி மெட்ரிக் பள்ளி விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்தார், ஜூலை 12-ஆம் தேதி இரவு இந்த பள்ளியில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார், ஆனால் அந்தப் பள்ளி தற்கொலை என நாடகம் ஆடுகிறது. ஜூலை 12ஆம் தேதி இரவு கொலை செய்துவிட்டு 13-ஆம் தேதி காலையில் குழந்தை ஸ்ரீமதி உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக தாளாளர் தெரிவித்தார். எனது மகளின் உடற்கூறு ஆய்வு அறிக்கையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாரா என்ற பிரதானமான கேள்விக்கு பதில் இதுவரை இல்லை.
எனது மகளின் இறப்பின் தன்மையை ஆய்வு செய்த வழக்கறிஞர்கள், உண்மை அறியும் குழு, ஊடகங்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்கள் அனைவரும் கொலை என உறுதிப்படுத்தியுள்ளனர். மாண்புமிகு முதல்வர் அவர்கள் எனது மகளின் கொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கண்டுபிடித்து தக்க தண்டனை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ஸ்ரீமதி இறப்பில் பள்ளி மற்றும் அரசு அதிகாரிகளின் அலட்சியங்கள்:
1. என் மகள் இறந்த தருணத்திற்கு முன்பும் பின்பும் சக்தி மெட்ரிக் பள்ளியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை எனக்கு காண்பிக்க காவல்துறை அதிகாரிகளை கேட்டேன் ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர்.
இதையும் படியுங்கள்: ஸ்டாலின் சொன்ன அந்த ஒரு வார்த்தையில் சமாதானமான மாணவி ஸ்ரீமதியின் தாய்.. தலைமை செயலகத்தில் நடந்தது என்ன.!
2. என் மகள் இறந்து விட்டதாக எனக்கு செய்தி சொன்ன பள்ளி நிர்வாகத்தினரிடம் நான் வரும்வரை மருத்துவமனையில் காத்திருக்கச் சொன்னேன், ஆனால் அனைவரும் ஓடி விட்டனர். பள்ளி நிர்வாகம் என் மகள் மரணத்திற்கான காரணத்தை விளக்கத்தையும் அளிக்கவில்லை.
3. என் மகள் இறந்த அன்று என் மகன் தங்கியிருந்த அறை, அவளுடைய பை அவளுடைய உடமைகளை என்னிடம் காண்பிக்கவும் என் மகள் தோழிகளை நான் சந்திக்க வேண்டும் என்றும் காவல்துறையினரிடம் சொன்னேன், ஆனால் காவல்துறையினர் மறுத்துவிட்டனர்.
இதையும் படியுங்கள்: கள்ளக் குறிச்சி மாணவியின் தாய் முதல்வருடன் சந்திப்பு.. தலைமைச் செயலகத்திற்கே வந்து ஸ்டாலினிடம் முறையீடு.
4. என் மகள் இறப்பிற்கு முன் எழுதியதாக ஒரு கடிதம் இருந்ததாகவும், அவை ஜூலை 13-ஆம் தேதி அன்று எடுத்ததாக கூறி காவல்துறையினர் அதை என்னிடம் கொடுக்காமல், ஊடகத்தில் மட்டும் படித்துக் காட்டினர்.
5. என் மகளின் முதல் பிரேத பரிசோதனையை உரிய வருவாய் மற்றும் மருத்துவ அதிகாரிகள் முன்னிலையில் செய்ய வேண்டும் என்று கோரியிருந்தேன், ஆனால் அந்த வகையில் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை.
6. எனது மகளின் மர்ம மரணத்திற்கு உரிய விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி ஜூலை 13 மற்றும் 16 வரை அதிகாரிகளிடம் முறையிட்டும் அவர்கள் யாரும் உரிய விசாரணை மேற்கொள்ளவில்லை.
7. என் மகள் விழுந்ததாக கூறப்பட்டுள்ள இடத்தில் ரத்த தொய்வு எதுவுமில்லை.
8. என் மகளின் பிரேதத்தை மருத்துவமனை பிண அறையில் யார் சொல்லி யார் வைத்தார்கள் என்று கேட்டதற்கு எனக்கு பதிலும் இல்லை.
9. மாவட்ட ஆட்சித்தலைவர் பள்ளிக்கு வந்து ஸ்ரீமதியின் கொலை சம்பவத்தை ஆய்வு செய்யாமல் இருந்தது,
10. முதல் உடற்கூறு ஆய்வில் பாலியல் தொடர்பான பரிசோதனைகள் செய்யாமல் இருந்தது, இரண்டாவது உடற்கூறு ஆய்வில் ஸ்ரீ மதியின் தரப்பில் மருத்துவரை உயர் நீதிமன்றம் அனுமதிக்க மறுத்தது, உயர் நீதிமன்ற தீர்ப்பில் ஸ்ரீமதி தரப்பில் பெற்றோர் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொள்ளலாம் என்ற தீர்ப்பு இருந்தும் பெற்றோர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் இல்லாமல் அவசர அவசரமாக இரண்டாவது உடற்கூறு ஆய்வு செய்தது, ஸ்ரீமதி என் உடலை வாங்கி அடக்கம் செய்வதற்கு உயர் நீதிமன்றம் அவசர அவசரமாக தீர்ப்பு வழங்கியது,
என் மகள் அணிந்திருந்த தங்கத்தோடு, வெள்ளி கொலுசு இரண்டையும் கேட்டதற்கு அது பற்றி எதுவும் தகவல் இல்லை, எனவே மாண்புமிகு முதல்வர் அவர்கள் தலையிட்டு என் மகள் ஸ்ரீமதி என் மரணத்தில் உள்ள மர்மங்களை எனக்கு தெளிவுபடுத்தவும், உரிய நடவடிக்கை எடுத்து ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி கிடைக்க ஆவன செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு செல்வி ராமலிங்கம் என அதில் கூறப்பட்டுள்ளது.