காவலர்களுக்கு அதிர்ச்சி செய்தி..! டிஜிபி அதிரடி அறிக்கை..! 

பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசார் செல்போன்களை பயன்படுத்தக் கூடாது என டிஜிபி டி.ராஜேந்திரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

நேற்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் என்பவர் தன் காரில் பயணம் மேற்கொண்டபோது, பணியில் இருக்கும் போலீசார் இருவரும் செல்போனில் பேசியவாறு இருந்துள்ளனர். அந்த தருணத்தில் ஒரு பெண்மணி அந்த சாலையை கடக்க முயன்றுள்ளார் அதற்குள் சிக்னல் விழுந்துவிடவே மற்ற இரு சக்கர வாகனங்கள் முதல் அனைத்தும் கிளம்பத் தொடங்கின. இதனால் சற்று தடுமாறி அந்த பெண் ஒரு வழியாக சாலையை கடந்து உள்ளார்.

இதனையெல்லாம் நேரடியாக பார்த்த நீதிபதி இது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து டிஜிபி ராஜேந்திரன் அனைத்து காவல் நிலையத்திற்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் சட்டம் ஒழுங்கு. முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு. பெரிய பெரிய விழாக்கள், கோவில் திருவிழாக்கள் இதுபோன்ற சமயத்தில் காவலர்கள் செல்போன் பயன்படுத்தக்கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது, மேலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போது அதிக நேரம் செல்போனை பயன்படுத்த கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயத்தில் உதவி ஆய்வாளர் மற்றும் ஆய்வாளர் அவர்களுக்கு மேல் உள்ள பதவியில் உள்ளவர்கள் செல்போனை பயன்படுத்தலாம் என்றும், உதவி ஆய்வாளருக்கு கீழ் உள்ள பதவியிலுள்ள போலீசார் யாரும் செல்போன் பயன்படுத்தக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை பணியின் போது  அதிக நேரம் செல்போன் பயன்படுத்தினால் அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என டி.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.