கும்பகோணத்தில் நடந்த இரங்கல் கூட்டத்தில், சசிகலாவை புரட்சித்திலகம் என்று அழைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கும்பகோணம் சட்டப்பேரவை தொகுதி அதிமுக சார்பில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றத் தலைவர் தம்பிதேவரத்தினம் தலைமையில் இரங்கல் தீர்மானக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், ஜெயலலிதாவோடு உடனிருந்த சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்க வலியுறுத்துவது, சசிகலாவை புரட்சித்திலகம் என அழைப்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் இந்த இரங்கல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
