பணியில் காவல் நிலையத்தில் வைத்து பெண் காவலருக்கு, சிறப்பு எஸ்ஐ முத்தம் கொடுத்தார். இந்த வீடியோக காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது. இச்சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்ஐயாக வேலை பார்ப்பவர் பாலகிருஷ்ணன் (54). இதே காவல் நிலையத்தில் முதல்நிலை பெண் காவலாராக வேலை பார்ப்பவர் சசிகலா (34). கடந்த 12ம் தேதி சசிகலா, காவல் நிலையத்தில் இரவு பணியில் இருந்தார். அப்போது, அங்கு யாரும் இல்லை. தனியாக இருந்துள்ளார். இதனால் அவர், தனது செல்போனில் கேம் விளையாடி கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த பாலகிருஷ்ணன், சசிகலாவின் அருகில் சென்று பேச்சு கொடுத்தார். பின்னர் அவர், சசிகலாவுக்கு முத்த மழை பொழிந்தார். 

அந்த நேரத்தில், ஏட்டு கேசவன் என்பவர், எதேச்சையாக அங்கு வந்தார். இருவரின் நடவடிக்கையை பார்த்துவிட்டு அவர், அறைக்கு சென்றுவிட்டார். பின்னர், அவர்கள் மீது சந்தேகமடைந்த கேசவன், காவல் நிலையத்தில் உள்ள கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, எஸ்எஸ்ஐ பாலகிருஷ்ணன், பெண் காவலர் சசிகலாவுக்கு முத்த மழை பொழிந்த வீடியோ பார்த்து அதிர்ச்சியடைந்தார். 

இதுபற்றி சசிகலாவிடம் விசாரித்தபோது, வலுக்கட்டாயமாக எஸ்எஸ்ஐ பாலகிருஷ்ணன் தனக்கு முத்தம் கொடுத்ததாக புகார் செய்தார். இதை எழுத்துப்பூர்வமாக புகாராக பெற்று கொண்ட கேசவன், எஸ்பி அலுவலகத்துக்கு வீடியோ ஆதாரத்துடன் அனுப்பி வைத்தார். இதையடுத்து எஸ்பி, சிறப்பு எஸ்ஐ பாலகிருஷ்ணனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். ஆனால் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பெண் காவலரின் ஒத்துழைப்போடுதான் முத்தம் கொடுத்ததாகவும், தற்போது தகவல் வெளியாகியுள்ளது.