Asianet News TamilAsianet News Tamil

டேட்டிங் செயலியில் பெண்களை போல் பேசி ஆண்களை ஏமாற்றிய மோசடி கும்பல்..! மும்பையில் 7 பேர் அதிரடி கைது

லோகேன்டோ டேட்டிங் செயலி மூலம் பெண் குரலில் பேசி ஆண்களிடம் மோசடியில் ஈடுபட்ட  7 பேரை மும்பையில் சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

Seven arrested for defrauding men through dating app
Author
First Published Jun 11, 2023, 11:52 AM IST

தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக நாளுக்கு நாள் மோசடிகளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் ஆண்களை குறி வைத்து மோசடி கும்பல் கடந்த சில வருடங்களாகவே களம் இறங்கி பணத்தை பறித்து வருகிறது. இந்தநிலையில் லோகேன்டோ டேட்டிங் செயலி மூலம் பெண்கள் பேசுவது போல பேசி, கோவையை சேர்ந்த பலரிடம் லட்சக்கணக்கான பணம் பெற்று மோசடியில் ஈடுபடுவதாக கடந்த 2022ல் சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் வந்துள்ளது. 

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த மர்ம நபர்களை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.இந்நிலையில் அவர்கள் மும்பையில் இருந்து மோசடி செய்வது தெரியவந்தது. இதனையடுத்து மும்பைக்கு விரைந்த தனிப்படை போலீசார் அங்கு முகாமிட்டு கண்காணித்து அங்குள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் பதுங்கியிருந்த 7 பேரை கைது செய்தனர்.

Seven arrested for defrauding men through dating app

மோசடியில் ஈடுபட்ட அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. மும்பையில் இருந்தவாறு இணையதளத்தை பெண்களில் புகைப்படங்களை காட்டியும், மற்ற இளைஞர்களின் ஆவணங்கள் வங்கி கணக்குகளை வைத்தும் மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. மோசடி தொடர்பாக அப்சல் கான் (24), கர்ணன் (24), தமிழரசன் (23), மணிகண்டன் (22), ஜெயசூர்யா பாண்டியன் (25), விக்னேஷ் வீரமணி (25), பிரேம்குமார் (33) ஆகியோரை கைது செய்து கோவைக்கு அழைத்து வந்தனர். இவர்கள் Locanto வலைத்தளம் மூலமாக Call Girls and call Boys available என்று விளம்பரம் செய்து அதனைப் பார்த்து அழைக்கும் இளைஞர்களிடமிருந்து பல்வேறு காரணங்களை கூறி அவர்களை ஏமாற்றி பல்வேறு வங்கி கணக்கில் பணத்தை பெற்று மோசடி வேலையில் ஈடுபட்டிருக்கின்றனர். 

Seven arrested for defrauding men through dating app

இவர்கள் தமிழகத்தின் முக்கியமான நகரங்கள் மற்றும் இந்தியாவின் பல்வேறு நகரங்களை குறிவைத்து விளம்பரங்களை செய்து அதன் மூலம் தங்களுடைய மோசடி வேலைகளை செய்து வந்திருக்கின்றனர்.மேலும் தங்கள் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காக call boys வேலைக்கு ஆசைப்பட்டு வரும் இளைஞர்களிடமிருந்து அவர்களுடைய ஆவணங்களை பெற்று அவர்கள் பெயரிலேயே வங்கிக் கணக்கும் மொபைல் எண்களும் பெற்று அதை பயன்படுத்தி மோசடி வேலைகளை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படியுங்கள்

வன்புணர்வு வீடியோவைக் காட்டி மிரட்டி ஒன்றரை வருடமாக செக்ஸ் டார்ச்சர்!

Follow Us:
Download App:
  • android
  • ios