servant took video clip of bathing
மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபரின் மனைவி குளிப்பதை திருட்டு தனமாக தன் செல்போனில் படம் எடுத்த வேலைக்காரன் கைது செய்யபபட்டார்

குற்றத்திற்கும் குற்றவாளிகளுக்கும் பஞ்சமே இருக்காது போல...அவ்வாறு நடக்கும் பல குற்றங்களில் ஒன்றை தற்போது பார்க்கலாம்
மும்பை சிஞ்ச்போக்லியைச் சேர்ந்த தொழில் அதிபரின் மனைவி குளித்து கொண்டிருக்கும் போது, சோப்பு டப்பாவுக்கு அருகில் இருந்து ஏதோ வெளிச்சம் வருவதைப் பார்த்து சந்தேகம் அடைந்துள்ளார்
உடனே சோப்பு டப்பாவை நீக்கிவிட்டுப் பார்த்த போது, அங்கு செல்போன் ஒன்று வைக்கப்பட்டு இருந்ததை உணர்ந்த அவர்,உடனடியாக போலீசில் புகார் கொடுத்தார்.அந்த செல்போனை கைப்பற்றி விசாரணை மேற்கொண்ட போலீசார்,அந்த செல்போன், அந்த வீட்டு வேலைக்காரன் பயன்படுத்தியது என கண்டுபிடித்தனர்.
பீகார் மாநிலத்தை சேர்ந்த வேலைக்காரன் கைலாஷ்,தான் செய்த தவறை ஒப்புக்கொண்டார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட அவரை 25-ந்தேதி வரை போலீஸ் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
