அமலாக்கத்துறை விசாரணையில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு அவரது வழக்கறிஞர்கள் சோப்பு, சீப்பு, பிரஸ் கொண்டு வந்து கொடுத்தனர். இதனை அமலாக்கத்துறை அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர். 

செந்தில் பாலாஜி- அமலாக்கத்துறை விசாரணை

மோசடி புகாரில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை, அமலாக்கத்துறை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணையை நடத்தி வருகிறது. நேற்று மாலை புழல் சிறையில் இருந்து செந்தில் பாலாஜியை அழைத்து சென்ற அமலாக்கத்துறை நேற்று இரவு சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தியது. இதனையடுத்து இன்று காலை செந்தில் பாலாஜியின் உடல் நிலையை மருத்தவர்கள் பரிசோதித்த நிலையில், மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளது.

நாளொன்றுக்கு 50 கேள்விகள் என்ற முறையில் விசாரணை தொடங்கியுள்ளனர்.இந்தநிலையில் புழல் சிறையில் இருந்து செந்தில் பாலாஜியை மட்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்து வந்ததால் எந்த வித கூடுதல் பொருட்களையும் செந்தில் பாலாஜி எடுத்து செல்லவில்லையென கூறப்படுகிறது. 

செந்தில் பாலாஜி- சோப்பு, பிரஸ்

இதனையடுத்து அவருக்கு சோப்பு,சீப்பு, பேஸ்ட் உட்பட பல்வேறு பொருட்களை பரணி குமார் என்ற வழக்கறிஞர், சாஸ்திரிபவன் உள்ளே சென்று வழங்க முயன்றார். அப்பொழுது அங்கிருந்த காவல்துறை அதிகாரிகள் அவருக்கு அனுமதி மறுத்து, பின்னர் அவரிடம் இருந்த பொருட்களை காவல்துறையினர் பெற்றுக் கொண்டு அந்த பொருட்களை பரிசோதனை செய்த பிறகு உள்ளே எடுத்துச் சென்றனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் பரணிகுமார், சோப்பு, பிரஸ் உள்ளிட்ட பொருட்களை கொடுக்க வந்தோம்,

அப்போது அமலாக்கத்துறையால் ஏற்கனவே அனைத்து பொருட்களும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கொடுக்கப்பட்டதாக தெரிவித்தனர். இருந்த போதும் வழக்கறிஞர் என்ற முறையில் எங்கள் சார்பாக கொடுக்க வேண்டும் என கூறியதாகவும், இதனையடுத்து அந்த பொருட்களை பெற்றுக்கொண்டதாக தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

செந்தில் பாலாஜியிடம் தொடரும் விசாரணை..! அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு திடீரென வந்த மருத்துவர்கள்- காரணம் என்ன.?