sengundram fire accident

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே உள்ள பிளாஸ்டிக் குடோன் ஒன்றில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பற்றிய தீயில் கொடவுனில் வேலை செய்யும் 5 ஊழியர்கள் சிக்கி உள்ளனர். அவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சென்னையை அடுத்த செங்குன்றம் அருகே லட்சுமிபுரம் பகுதியில் பிளாஸ்டிக் குடோன் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பிளாஸ்டிக் கொடவுனில் வேலை செய்யும் 5 ஊழியர்கள் உள்ளே பணியில் இருந்தனர். இன்று சுமார் 4 மணி அளவில் இந்த பிளாஸ்டிக் குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென எரிந்ததால் யாரும் அருகில் நெருங்க முடியவில்லை.

குடோனில் தீப்பற்றியதை அடுத்து தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பற்றி எரியும் தீயால் சுற்றுவட்டாரம் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

தீ விபத்துக்கு காரணம் என்ன என்பது குறித்து தகவல் இன்னும் தெரியவில்லை. மேலும் பிளாஸ்டிக் குடோனில் பணியில் இருந்த 5 பேரை மீட்கும் பணி நடந்து வருகிறது. தொடர்ந்து தீயணைக்கும் பணியை தீயணைப்பு வீரர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.