நாளுக்கு நாள் சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து கொண்டே போவதாக சில கருத்து கணிப்புகள் தெரிவித்தாலும்... இது மனத்தால் ஏற்றுக்கொள்ள முடியாததாகவே உள்ளது.

ஆனால் தற்போது சேலத்தில் 14  வயது சிறுமிக்கு அரங்கேறியுள்ள சம்பவம் அனைவருடைய மனதையும் பதற வைத்துள்ளது. 

சேலம் மாவட்டத்தில் 8 ஆம் வகுப்பு படித்து வந்த ராஜலட்சுமி என்ற 14 வயது சிறுமியை,  திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கும்...  அப்பா வயது மதிக்க தக்க மனிதர் கார்த்திக் என்பவர் ஒருதலையாக காதலித்து.. தலையை வெட்டி கொலை செய்துள்ளார்.

தொடர்ந்து அந்த மாணவி பள்ளி சென்று வரும்போதெல்லாம்... அந்த சிறுமையை பின் தொடர்ந்து வந்து தொந்தரவு செய்துள்ளதாக தெரிகிறது...? பின் என்ன நடந்தது என தெரியவில்லை திடீர் என அந்த சிறுமியின் தலையை வெட்டி, கொலை செய்தார் கார்த்திக். அவரை மடக்கி பிடித்த பொது மக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் அவரை கைது செய்து விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி..  கேட்பவர்கள் நெஞ்சையே பதறவைத்துள்ளது. கார்த்திக் அளித்துள்ள வாக்குமூலத்தில், "நான் சிறுமி ராஜலட்சுமியை ஒருதலையாக காதலித்து வந்தேன, அவர் பள்ளிக்கு சென்று வரும்போதெல்லாம் அவரை பின்தொடர்ந்து செல்வேன். ஆனால் ராஜலட்சுமிக்கு என்னை பிடிக்கவில்லை, மேலும் இது குறித்து  தனது தந்தையிடம் தெரிவித்து விடுவேன் என மிரட்டியதால் அவரை கொலை செய்தேன் என கூறியுள்ளார்.

மேலும், என்னை கொன்று விடுங்கள் என போலீசாரிடம் கெஞ்சியுள்ளார். தன்னை வெளியில் விட்டால், இதுபோல் வேறு யாரையாவது கொலை செய்து விடுவேன். எனவே என்னை உயிருடன் விட்டு விடாதீர்கள் என்றும் என்னை ரெயில் தண்டவாளத்தில் படுக்க வையுங்கள் என்று கூறியுள்ளார்.

இவருக்கு ஏற்கனவே திருமணமாகி சாரதா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.  இந்த சம்பவம் குறித்து கார்த்தியின் மனைவி சாரதா கூறுகையில், எனது கணவர் அடிக்கடி சைக்கோ போல நடந்து கொள்வார் என்றும்... திடீரென மரத்தை வெட்டுவார். எப்போதும் ஏதாவது முணு முணுத்துக்கொண்டே இருப்பார். கோபத்தில் ஆவேசமாக திட்டுவார். உறவினர்களை அடிப்பார். அடிக்கடி சாமியும் ஆடுவார் என கூறியுள்ளார். மேலும் இவர் சைகோவா என்கிற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள்.