தமிழகத்தின் ஒட்டுமொத்த பரபரப்பையும் அடக்கி இருக்கு மணல் மாஃபியா சேகர் ரெட்டி வீடு அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதில் ஏராளமான ஆவணங்கள் சிக்கியது. 

ராம் மோகன ராவின் மகன் விவேக் மோகனராவ் போன்றவர்களின் தொடர்பு உள்ளதை அடித்து ராம்மோகன்ராவ் வீடு , விவேக்கின் நிறுவனங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. இந்நிலையில் சிபிஐ சேகர் ரெட்டியை கைது செய்தது.

கைது செய்யப்பட்ட சேகர் ரெட்டியை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசி அதிகாரிகள் மனு அளித்திருந்தனர், ஜாமீன் கோரி சேகர் ரெட்டி மனு அளித்திருந்தார். இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

சேகர் ரெட்டி உள்ளிட்ட 5 பேரின் ஜாமீன் மனு இன்று சி.பி.ஐ. நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி விஜயலட்சுமி முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, திடீரெ நீதிபதி, வழக்கறிஞர் தவிர வேறு யாருக்கும் நீதிமன்ற அறைக்கு அனுமதி இல்லை. பத்திரிகையாளர்களை வெளியே போ சொல்லுங்கள் என உதவியாளரிடம் கூறினார். 

இதனையடுத்து உதவியாளர்கள் பத்திரிகையாளர்களை வெளியேற்றினார். ஜாமீன் வழக்கு விசாரணை நேரத்தில் பல தகவல்கள் சிபிஐ தரப்பி கூறப்படும் அதன் விபரங்களை செய்தியாக்க கூடாது என்ற நோக்கத்தில் வெளியேற்றம் நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.