தொழிலதிபர் சேகர் ரெட்டி வங்கி பண பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து, அவரது நண்பர்கள் பிரேம்குமார், சீனிவாசுலு ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது சிபிஐ போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இவரிடம் இருந்து புதிய பலகோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதில், 2000 ரூபாய் நோட்டுகளும் அதிகளவில் இருந்தது. எவ்வித ஆவணமும் இல்லாமல், நூற்றுக்கணக்கான சவரன் நகைகளும் கைப்பற்றப்பட்டன.

இந்நிலையில், சேகர் ரெட்டி உள்பட 3 பேர் மீதான  வழக்கு இன்று சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இதையொட்டி சேகர் ரெட்டி உள்பட 3 பேர் கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள். கோர்ட்டில் ஆஜரான 3 பேர் மீது மேலும் 2 வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளது.