Asianet News TamilAsianet News Tamil

பள்ளி கட்டணம் செலுத்தாததால் அவமானப்படுத்திய ஆசிரியர்கள்?தற்கொலை செய்து கொண்ட 9ஆம் வகுப்பு மாணவன்-சீறும் சீமான்

பள்ளிக்கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக மாணவனை  அவமானப்படுத்தி, தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு மனவுளைச்சலுக்கு ஆளாக்கிய பாளையங்கோட்டை தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க சீமான் வலியுறுத்தியுள்ளார். 
 

Seeman has insisted that action should be taken against the private school in the school student suicide incident
Author
First Published Jan 8, 2024, 7:30 AM IST | Last Updated Jan 8, 2024, 7:30 AM IST

பள்ளி கட்டணம்- மாணவன் தற்கொலை

9ஆம் வகுப்பு படிக்கும் தனியார் பள்ளி மாணவன் தற்கொலை தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள 'பெல்' தனியார் பள்ளியில் படித்துவந்த ஒன்பதாம் வகுப்பு மாணவன் நரேனை பள்ளிக்கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக அவமானப்படுத்தி, தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு மனவுளைச்சலுக்கு ஆளாக்கிய பள்ளி நிர்வாகத்தின் செயல் பெரும் அதிர்ச்சியும், கடும் கோபத்தையும் ஏற்படுத்துகிறது. பெற்றெடுத்து பேணி வளர்த்த அன்பு பிள்ளையை இழந்துவாடும் மாணவர் நரேனின் பெற்றொருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன். 

Seeman has insisted that action should be taken against the private school in the school student suicide incident

பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை

மாணவரை தற்கொலைக்கு தூண்டிய ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராடிய மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்களை காவல்துறையை ஏவி கைது செய்துள்ள திமுக அரசின் சிறிதும் மனச்சான்று அற்ற கொடுஞ்செயல் வன்மையான கண்டனத்துக்குரியது. மாணவரின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு, மாணவர் தற்கொலைக்கு நீதி வேண்டி போராடும் மனித உரிமை அமைப்புகளை போராட அனுமதியாது தடுப்பதென்பது கொடுங்கொன்மையாகும். இதற்கு பெயர்தான் திராவிட மாடலா? இதுதான் சமூகநீதி ஆட்சியா? கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கள்ளக்குறிச்சி மாணவி அன்புமகள் ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்டபோது,

Seeman has insisted that action should be taken against the private school in the school student suicide incident

பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாக திமுக அரசு

பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாகச் செயல்பட்ட அதே கொடும் அணுகுமுறையையே தற்போதும் திமுக அரசு கடைபிடிப்பது வெட்கக்கேடானதாகும். ஆகவே, தமிழ்நாடு அரசு இனியாவது அறத்தின் பக்கம் நின்று பாளையங்கோட்டை தனியார் பள்ளி மாணவர் நரேன் தற்கொலைக்கு காரணமானவர்கள் குறித்து விரைந்து நீதி விசாரணை செய்து குற்றவாளிகளுக்கு சட்டப்படி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துவதாக சீமான் தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

இரவு முழுவதும் வெளுத்து வாங்கிய கன மழை.. பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை- எந்த எந்த மாவட்டங்கள் தெரியுமா.?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios