சென்னையில் நேற்று எக்மோர் ரயில் நிலையத்தில் இரயில்வே போலிசாரால் கைபற்றபட்ட இறைச்சி நாய்கறி என்று சமூகவலைதளங்களில் பரபரப்பான செய்தி வெளியானது.அதனை கண்ட பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

சென்னையில் நேற்று எக்மோர் ரயில் நிலையத்தில் இரயில்வே போலிசாரால் கைபற்றபட்ட இறைச்சி நாய்கறி என்று சமூகவலைதளங்களில் பரபரப்பான செய்தி வெளியானது.அதனை கண்ட பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆனால் அங்கு கைபற்றபட்ட இறைச்சி நாய்கறி அல்ல என்றும் அந்த இறைச்சி அனைத்தும் எனக்குதான் வந்தது என்றும் அவை அனைத்துமே ஆட்டிறைச்சி தான் என்றும் அதன் உரிமையாளர் கூறிஉள்ளார்.

அந்த ஆடுகள் அனைத்தும் எனக்குதான் வந்தது நான் ஷகிலா பானு திருவான்மியூரில் இருக்கின்றேன் நான் கேட்டரிங் தொழில் நடத்துகின்றேன். எனக்குதான் ராஜஸ்தானில் இருந்து ஆடுகள் வந்தது. நான் முறைப்படி தான் ஆட்டுகறி வாங்கிவருகின்றேன் மேலும் யாரோ வேண்டும் என்றே இதனை நாய்கறி என்று வதந்தி பரப்புகின்ரார்கள் என்று கூறினார்,

மேலும் நான் அளித்த பேட்டியை இதுவரை எந்த மீடியாவும் வெளியிடவில்லை என்றும் கூறினார். எனவே அசைவ பிரியர்கள் யாரும் பயப்படவேண்டாம் என்று கேட்டுகொள்கின்றோம்,

அந்த ஆடுகள் அனைத்தும் செம்மறி கிடை வகைகள் ஆகும் அந்த வகை ஆடுகளுக்கு வால் பெரியதாக தான் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.