தமிழகத்தின் அமைதி சூழலை கெடுக்கும் திரைப்படங்களுக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இந்த திரைப்படம் வெளியிடப்பட்டால் எஸ்.டி.பி.ஐ. கட்சி போராட்டங்களை நடத்தும் என நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.

கேரளா ஸ்டோரிக்கு எதிர்ப்பு

இஸ்லாமியர்களுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், கேரளா ஸ்டோரி இந்தியாவில் வாழக்கூடிய சிறுபான்மை முஸ்லிம் சமூகம் ஒரு மிகப்பெரிய வாழ்வியல் நெருக்கடியை சந்தித்து வரும் சூழலில், காஷ்மீர் ஃபைல்ஸ், புர்கா, கேரளா ஸ்டோரி என தொடர்ந்து முஸ்லிம் சமூகம் தொடர்பான பொய்யையும், அவதூறையும் கலந்து திரைப்படங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. முஸ்லிம்களின் கலாச்சாரம், பண்பாடுகள் குறித்த தவறான பார்வையை வேண்டுமென்றே வெளியிடுவது, பொது சமூகத்திடம் அச்சத்தை விதைப்பது போன்றவை இதுபோன்ற திரைப்படங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதுபோன்ற திரைப்படங்கள் சங்பரிவார்கள் முன்னெடுக்கும் வெறுப்பு பிரச்சாரத்துக்கு வலுசேர்க்கவே திட்டமிட்டு தயாரிக்கப்பட்டு, வெளியிடப்பட்டு வருகின்றன.

காப்பி சர்ச்சையில் சிக்கிய ‘பொன்னியின் செல்வன் 2’ பாடல்! என்னடா இது ஏ.ஆர் ரஹ்மானுக்கு வந்த சோதனை

தமிழகத்தில் திரையிட்டால் போராட்டம்

இதன்மூலம் சமூகங்களுக்கிடையே வன்மத்தை, மதமோதலை உருவாகவும், அமைதியை சீர்குலைக்கவும் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. சிறுபான்மை முஸ்லிம் சமூகம் சந்திக்கும் பல்வேறு நெருக்கடிகள் ஏராளமாக உள்ளபோதும், அதுபற்றி பேசாமல் அவதூறை பரப்பி, அமைதியை சீர்குலைக்கும் இதுபோன்ற பொய்யான, அரசியல் நோக்கம் கொண்ட பரப்புரை படங்கள் தடை செய்யப்பட வேண்டும். எதிர்வரும் மே 5 அன்று வெளியாகும் கேரளா ஸ்டோரி படத்திற்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும். கருத்துச் சுதந்திரம் என்கிற பெயரால் தமிழகத்தின் அமைதி சூழலை கெடுக்கும் திரைப்படங்களுக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். தமிழக அரசு இதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும். இந்த திரைப்படம் வெளியிடப்பட்டால் எஸ்.டி.பி.ஐ. கட்சி போராட்டங்களை நடத்தும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இஸ்லாமிய சிறை கைதிகள்

ஆயுள் சிறைவாசிகள் விடுதலையைப் பொறுத்தவரை தற்போது சட்டத்தின் தடையோ அல்லது நீதிமன்றத்தின் தடையோ எதுவும் இல்லை என்பதும், முழுக்க முழுக்க அது மாநில அரசின் கைகளில் மட்டுமே உள்ள மாநில உரிமை சார்ந்த விஷயம் என்பது உறுதிப்படுத்தப்பட்ட பிறகும், 25 ஆண்டுகளாக தமிழக சிறைகளில் தண்டனை அனுபதித்து வரும் முஸ்லிம் ஆயுள் சிறைக் கைதிகளை விடுவிப்பதில் மட்டும் தொடர்ந்து பாரபட்சம் காட்டப்பட்டு வருகின்றது. ஆளுநர் ஒப்புதலுக்கு அளிக்கும் பட்சத்தில் முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலை என்பது மேலும் காலதாமதமாகும். ஆகவே, முஸ்லிம் ஆயுள் சிறைக் கைதிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய அமைச்சரவை தீர்மானத்தை தமிழக அரசு உடனடியாக இயற்ற வேண்டும் என கேட்டுக்கொள்வதாக நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

ஆளுநர் மாளிகை நிதி செலவில் முறைகேடா..? தமிழக அரசு கூறியது அப்பட்டமான பொய்- இறங்கி அடிக்கும் ஆர். என் ரவி