வங்கியில் ரூ.9 ஆயிரம் கோடிகடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் லண்டனில் தலைமறைவாக இருந்த தொழிலதிபர்  விஜய் மல்லையாவை(வயது61) இந்தியாவின் வேண்டுகோளை ஏற்றுஸ்காட்லாண்ட் போலீசார் நேற்று கைது செய்தனர்.

ஆனால், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்ட மல்லையா, 3 மணிநேரத்தில் ஜாமீனில் வெளியே வந்தார்.

ரூ.9 ஆயிரம் கோடி

தொழிலதிபர் விஜய் மல்லையா தனது கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்காக பல்வேறு வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று இருந்தார்.

இந்த கடனை திருப்பிச் செலுத்தக்கோரி ஸ்டேட் வங்கிகள் கூட்டமைப்பு சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், கடனை திருப்பிச் செலுத்தாமல் விஜய் மல்லையா லண்டனுக்குகடந்த 2016ம் ஆண்டு மார்ச் 2-ந்தேதி தப்பி ஓடினார்.

இந்நிலையில்,  விஜய் மல்லையாவை நேற்று ஸ்காட்லாண்ட் யார்டு போலீசார் லண்டனில் ைகதுசெய்தனர். அவரை லண்டனில் உள்ள மத்திய போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு சிறிது நேரம் மல்லையாவை வைத்து இருந்த போலீசார், அங்கிருந்து வெஸ்ட் மினிஸ்டர்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

என்ன கூறினார்கள்?

விஜய் மல்லையா கைது செய்யப்பட்ட பின், ஸ்காட்லாண்ட் யார்டு போலீசார் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது-

விஜய் மல்லையா மீது மோசடி குற்றச்சாட்டுகள் இருப்பதையடுத்து, இந்திய அதிகாரிகள் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து, மல்லையாவை செவ்வாய்கிழமை காலை நாங்கள் முறைப்படிவாரண்ட் பெற்று கைது செய்துள்ளோம். லண்டன் மெட்ரோ போலீஸ் நாடுகடத்தும் பிரிவினர் மல்லையாவை கைது செய்து, லண்டன் மத்திய போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். சில மணிநேரங்களில் அவர் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். இவ்வாறு அவர் அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.