Asianet News TamilAsianet News Tamil

Tamil Nadu Schools Reopen:பெற்றோர்களே அலர்ட்..ஜூன் மாத இறுதியில் பள்ளிகள் திறப்பு.. பள்ளிக்கல்வித்துறை தகவல்..

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு மீண்டும் ஜூன் இறுதியில் பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

Schools to reopen at the end of June - School Education Information
Author
Tamilnádu, First Published May 19, 2022, 10:52 AM IST

1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதித்தேர்வு முடிவடைந்த நிலையில், மே 14 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகள் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.

மேலும் படிக்க: கட்சி தலைவரின் தலையை எடுத்த குற்றவாளியை கொஞ்சி குலாவும் திமுக.. கூட்டணி தொடருமா காங்கிரஸ்? அலறவிடும் பாஜக.!

மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டாலும் ஆசிரியர்கள் மே 20 ஆம் தேதி வரை பள்ளிக்கு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விடைத்தாள் திருத்தம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ஆசிரியர் பள்ளிகளுக்கு வர வேண்டும் என்றும் கூறப்பட்டது. 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுவதால், தேர்வு பணிக்கும் செல்லும் ஆசிரியர்கள் மற்றும் வெளிநாடு செல்வதற்கு முன் பதிவு செய்திருப்பர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுவதாக கூறப்பட்டது.

இந்நிலையில்  10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இம்மாத இறுதி வரை நடைபெறுகிறது. இதன் பின்னர், அடுத்த மாதத்தில் பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி நடைபெறவுள்ளது. மேலும் ஆசிரியர்கள் பயிற்சி, பள்ளி உள்கட்டமைப்பு மேம்படுத்துதல் போன்றவை நடைபெறுவதால், 1 முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் மாத இறுதியில் பள்ளிகள் மீண்டும் திறக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் ஜூன் 13 ஆம் தேதி திறக்கப்படும் என்று சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க: சூப்பர் அறிவிப்பு!!அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்..புதிய அரசாணை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை..

Follow Us:
Download App:
  • android
  • ios