தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி அனைத்து கல்லூரி மாணவர்களும், ஐடி ஊழியர்களும், பொது நல ஆர்வலர்களும் போராட்டத்தில் களம் இறங்கியுள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரி மட்டுமின்றிபள்ளி மாணவர்களும் போராட்ட களத்தில் குதித்துள்ளனர். இதனால், மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவாக தமிழத்திலுள்ள தனியார் பள்ளிகள் இன்று விடுமுறை அறிவித்துள்ளன.

இந்நிலையில் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, திருப்பூர், உள்பட பல மாவட்ட அரசு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர். இதனையடுத்து இன்று பள்ளி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என பரபரப்பாக பேசப்படுகிறது.

1947ம் ஆண்டுகளுக்கு முன் சுதந்திர போராட்டத்துக்கு பிள்ளைகள் செல்லும்போது, பெற்றோர்கள் தடுத்தனர். சிலர் மட்டும், தங்களது பிள்ளைகளை அனுப்பி வைத்தனர்.

ஆனால், 2017ம் ஆண்டில், அனைத்து பிள்ளைகளையும், பள்ளி மாணவர்களாக இருந்தாலும், அவர்களை தமிழனின் உணர்வு, பாரம்பரியத்தை மீட்க பெற்றோர்களே போராட்டத்தில் களம் இறக்கி விடுகின்றனர். இதனால், தமிழனின் உணர்வை, பிஞ்சு வயதிலேயே ஈர்க்கப்படுகிறது.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பகுதியில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் 1000க்கு மேற்பட்டோர் நேற்று மனித சங்கிலி மற்றும் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.