Asianet News TamilAsianet News Tamil

பாடம் நடத்த ஆசிரியரே இல்லை; தேர்வு மட்டும் எழுதணுமா? அரசு பள்ளி மாணவர்கள் போராட்டம்...

School students ignored exam held in Struggle emphasize one demand
School students ignored exam held in Struggle emphasize one demand
Author
First Published Jul 27, 2018, 7:09 AM IST


திருச்சி

திருச்சியில் பள்ளித் தேர்வை புறக்கணித்துவிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கல்வித் துறை அதிகாரி நிர்மலா மற்றும் புத்தாநந்தம் உதவி ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் போராட்டக் களத்திற்கு வந்தனர். அங்கு மாணவிகளிடம், "வரும் திங்கட்கிழமைக்குள் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்" என்று உறுதியளித்தனர்.

அப்போது மாணவிகள், "இப்பள்ளியில் அடிப்படை வசதிகள் எதுவுமில்லை. கழிவறை இல்லாததால் இயற்கை உபாதைகளுக்கு கூட மாணவிகள் திறந்தவெளிக்கு தான் செல்கின்றோம். இதுகுறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினர்.

அதற்கு கல்வித் துறை அதிகாரி நிர்மலா, "இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார். இதனையேற்ற மாணவிகள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து அமைதியாக வகுப்புகளுக்குச் சென்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios