ராமநாதபுரம் அருகே 10ஆம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ராமநாதபுரம் அருகே 10ஆம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பொட்டிதட்டி கிராமத்தை சேந்தவர் காயாம்பு. கூலி தொழிலாளியான இவரது மகன் கோபிகிருஷ்ணன், பரமக்குடியில் உள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக கோபி கிருஷ்ணன் பள்ளிக்கு செல்லாமல், கிராமத்தில் உள்ள நண்பர்களுடன் சுற்றித் திரிந்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: 550 சவரன் நகையும் குடிச்சி தீர்த்துட்டேன்.. தொழிலதிபரை மடக்கிய மாடல் அழகி பகீர்..

இதனால் ஆத்திரமடைந்த தந்தை காயம்பு, அவரை கண்டித்து பள்ளிக்கு செல்லும்படி அறிவுறுத்தி உள்ளார். இதனால் கோபிகிருஷ்ணன் மனமுடைந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று பெற்றோர் வெளியே சென்றிருந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த கோபி கிருஷ்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையும் படிங்க: மகளின் காதலனை நள்ளிரவில் வரவழைத்த ஷகிலா.. இருவரும் சேர்ந்து என்ன செய்தார்கள் தெரியுமா?

சிறிது நேரத்திற்கு பின் வீட்டிற்கு வந்த பெற்றோர் மகன் தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்த பரமக்குடி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து தந்தை காயாம்பு அளித்த புகாரின் அடிப்படையில், பரமக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.