Asianet News TamilAsianet News Tamil

11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு எப்போது? அட்டவணையை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை!!

தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு காலாண்டு தேர்வுக்கான  அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 

school education dept announce quarterly exam dates of 11th and 12th
Author
First Published Sep 13, 2022, 7:45 PM IST

தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு காலாண்டு தேர்வுக்கான  அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்பு 12 ஆம் வகுப்புக்கு ஜூன் 20 ஆம் தேதியும், 11 ஆம் வகுப்புக்கு ஜூன் 27 ஆம் தேதியும் வகுப்புகள் தொடங்கப்பட்டன. அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், முதல் பருவத் தேர்வுகள் கடந்த மாதம் நடத்தி முடிக்கப்பட்டன. நடப்பு கல்விஆண்டுக்கான நாள்காட்டியை பள்ளி திறப்புக்கு முன்னரே தமிழக அரசு வெளியிட்டது. அதில், பள்ளி இயங்கும் நாட்கள், விடுமுறை விவரங்கள், காலாண்டு, அரையாண்டு, பொதுத்தேர்வு நடைபெறும் நாட்கள் உள்ளிட்ட தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. மேலும், காலச் சூழலுக்கேற்ப தேதிகளில் மாற்றம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது காலாண்டுத் தேர்வு தேதிகளை பள்ளிக்கல்வித் துறை உறுதிசெய்து, அதற்கான அட்டவணையை இன்று வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: விஜயபாஸ்கரின் இலுப்பூர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை நிறைவு..! ஆவணங்கள் சிக்காததால் ஏமாற்றம்

அதன்படி, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு காலாண்டுத் தேர்வுகள் செப்டம்பர் 22 முதல் 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தொடர்ந்து, மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் ஆயுத பூஜை விடுமுறை அக்டோபர் 1 முதல் 5 ஆம் தேதி வரை வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இதற்கான விரிவான கால அட்டவணை மாவட்டம் வாரியாக பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில், 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு போலவே காலாண்டுத் தேர்வுகளையும் நடத்த வேண்டும். இதற்கான வினாத்தாள்கள் தேர்வுத் துறை மூலம் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கல்வித் துறை தெரிவித்துள்ளது. பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அட்டவணையின்படி, 

இதையும் படிங்க: ஸ்ரீமதி வழக்கில் புதிய திருப்பம்.. பள்ளி நிர்வாகத்துடன் பேரம் பேசும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு ! - பரபரப்பு

12 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை:

தேதி தேர்வு
22.09.2022 மொழிப்பாடம் 
23.09.2022 ஆங்கிலம்
26.09.2022 கணிதம், விலங்கியல், வணிகவியல், ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு, வேளாண் அறிவியல்
27.09.2022 இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம், தொழில்சார் திறன்
28.09.2022 வேதியியல், கணக்கியல், புவியியல்
29.09.2022 கணினி அறிவியல், கணினி அப்ளிகேஷன், வீட்டுமுறை அறிவியல், அரசியல் அறிவியல்
30.09.2022 தாவரவியல், உயிரியியல், வரலாறு, பேசிக் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங், பேசிக் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், பேசிக் சிவில் இன்ஜினியரிங், பேசிக் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், பேசிக் மெக்கானிக்கல் இன்ஜினியரிங், அலுவலக மேலாண்மை, வணிக கணக்கு மற்றும் புள்ளியல்

 

11 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை:

தேதி தேர்வு
22.09.2022 ஆங்கிலம்
23.09.2022 மொழிப்பாடம்
26.09.2022 வேதியியல், கணக்கியல், புவியியல்
27.09.2022 தாவரவியல், உயிரியியல், வரலாறு, பேசிக் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங், பேசிக் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், பேசிக் சிவில் இன்ஜினியரிங், பேசிக்  ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், பேசிக் மெக்கானிக்கல் இன்ஜினியரிங், அலுவலக  மேலாண்மை, வணிக கணக்கு மற்றும் புள்ளியல்
28.09.2022 கணினி அறிவியல், கணினி அப்ளிகேஷன், வீட்டுமுறை அறிவியல், அரசியல் அறிவியல்
29.09.2022 கணிதம், விலங்கியல், வணிகவியல், ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு, வேளாண் அறிவியல்
30.09.2022 இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம், தொழில்சார் திறன்
Follow Us:
Download App:
  • android
  • ios