school and colleges are leave in ramnad district

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்களும் கடலுக்கு மின் பிடிக்க செல்லவில்லை.

வடகிழக்கு பருவமழை தொடங்கியதாலும், வங்க கடலில் வளிமண்டலத்தின் மேலடுக்கில் ஏற்பட்ட சுழற்சி காரணமாகவும் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், நேற்று மழை தீவிரம் அடைந்தது. இதன் காரணமாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய கடலோர மாவட்டங்களில் நேற்று பலத்த மழை பெய்தது. உள் மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்தது.

இதனால் சென்னையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. திருவள்ளூர், காஞ்சீபுரம், விழுப்புரம், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று பிற்பகல் தொடங்கி பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.