SC Notice to TN Govt How many farmers have committed suicide

தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் எத்தனை பேர்? என்று, 3 வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி, தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

பொது நல வழக்கு

தமிழக விவசாயிகள் தற்கொலைகள் தொடர்பான பொது நலன் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

இந்த விசாரணையின் போது தமிழக அரசிடம் பல்வேறு விளக்கங்களை கேட்டு பதில் மனுவைத் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

என்ன நடவடிக்கை?

குறிப்பாக விவசாயிகள் எத்தனை பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்? விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது போன்ற விவரங்களை 3 வார காலத்துக்குள் மனுவாக தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.