தொழிலதிபர் மனைவியை கடத்தி கற்பழித்த வழக்கு.! சதுர்வேதி சாமியார் 31ம் தேதி மகளிர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

சென்னை தொழில் அதிபரின் மனைவி-மகளை கடத்தி சென்று சிறை வைத்து கற்பழித்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சதுர்வேதியை சாமியார் 31ம் தேதி சென்னை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

sathurvethi swamy in the case of abduction of businessmanwife Ordered to appear in women court on 31st

சதுர்வேதியை சாமியார்- மோசடி

ஆன்மிகம் ஒரு பக்கம் இருந்தால் அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி ஏமாற்றும் கும்பலும் அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில், அரிசியை வெண்பொங்கலாக மாற்றி காட்டி, பல்வேறு சித்து விளையாட்டுகளை செய்து வந்தவர் சதுர்வேதியை சாமியார். அவருக்கு வெங்கடாசரவணன், பிரசன்ன வெங்கடாச்சாரியார் என்ற பெயரும் உள்ளது. அப்படி பல சித்து வேலைகளால் பலரையும் தன் வசம் படுத்தியவர். இவருக்கு ஏராளமான பெண் பக்தர்களும் உள்ளனர். சென்னை தியாகராயநகர் பசுல்லா சாலையில் ஸ்ரீராமானுஜர் மிஷன் டிரெஸ்ட் என்ற பெயரில் அறக்கட்டளை நடத்தி வந்தார். முதுகலை பட்டதாரியான இவர் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று தனது அறக்கட்டளை அலுவலகத்தில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்துவார். 

sathurvethi swamy in the case of abduction of businessmanwife Ordered to appear in women court on 31st

மனைவி, மகளை நிர்வாணமாக்கி பூஜை

இவரது பேச்சை நம்பி சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் தொழில் ரீதியாக தனக்கு ஏற்பட்ட பிரச்சினைகளை தீர்த்து வைக்க சாமியார் சதுர்வேதியை நாடினார். அப்போது அவரது வீட்டிற்கு வந்த சதுர்வேதியை சாமியார், பல்வேறு பூஜைகள் செய்ய தொடங்கினார். ஒரு கட்டத்தில் தொழில் அதிபரின் வீட்டை அபகரித்து கொண்டது இல்லாமல், தொழில் அதிபரின் மனைவி மற்றும் 16 வயது மகளையும் பூஜை என்ற பெயரில் நிர்வணப்படுத்தி பலாத்காரம் செய்ததாக காவல் நிலையத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு புகார் அளித்துள்ளார். இதனையடுத்து  தொழில்அதிபரின் மனைவியையும், மகளையும் ஆந்திர மாநிலத்திற்கு கடத்தி சென்றுவிட்டதாக தெரியவந்ததையடுத்து,

sathurvethi swamy in the case of abduction of businessmanwife Ordered to appear in women court on 31st

தலைமறைவான சதுர்வேதியை சாமியார்

கற்பழிப்பு, கடத்தல், சிறை வைத்தல் மற்றும் பெண்கள் வன்கொடுமை பிரிவு உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் சாமியார் சதுர்வேதி கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து ஜாமினில் வெளியே வந்தவர் தலைமறைவானர். அவரை தேடப்படும் குற்றவாளியாக மகளிர் நீதிமன்றம் அறிவித்திருந்தது.  இந்த வழக்கு 20 ஆண்டு காலமாக நடைபெற்று வந்த நிலையில்,  தற்போது தொழிலதிபர் மனைவியை கடத்திய வழக்கில் சதுர்வேதி சாமியார் 31ம் தேதி சென்னை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பித்துள்ளது.  

இதையும் படியுங்கள்

அமர்நாத் யாத்திரை சென்ற தமிழர்கள் பனிமலையில் சிக்கி தவிப்பு: உடனடியாக மீட்க கண்ணீர் மல்க கோரிக்கை!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios