கோவையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்ற சுப்பிரமணிய சாமி, டெல்லிக்கு புறப்பட்டார். அப்போது அவர், விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜல்லிக்கட்டுக்கு விரைவில் உச்சநீதிமன்றத்தில் அனுமதி கிடைக்கும். மாடுகள் சாகவில்லை. இது பாரம்பரிய விளையாட்டு என்ற விவரத்தை உச்சநீதிமன்றத்தில் எடுத்துரைத்து இருக்கிறேன்.

சசிகலாவுக்கு பொதுசெயலாளர் பதவி என்பது அவர்களது கட்சி விவகாரம். அவர் முதல்வர் ஆவதற்கு வாய்ப்புள்ளது. சசிகலாவுக்கு திறமை இல்லை என காங்கிரசார் கூறுகின்றனர். சோனியா எப்படி அரசியலுக்கு வந்தார் . அவருக்கு ஏதேனும் அனுபவம் இருந்ததா ? ராகுலுக்கு என்ன கல்வி அறிவுஇருக்கிறது.

இத்தனை நாள் தமிழகத்தில் நமக்கு ஒரு தொகுதி கூட கிடைக்கவில்லை. எனவே வரவிருக்கும் செயற்குழுவில் புதிய அமைப்புகள் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்க வேண்டும். மேலும் தமிழக பா.ஜ.கவில். புதிய தலைமை தேவைப்படுகிறது என்றார்.