சசிகலா புஷ்பா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சசிகலாவின் தாயார் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜாரானார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நெல்லை மாவட்டம் திசையன்விளையை சேர்ந்தவர் பானுமதி. இவர் தூத்துக்குடி மாவட்ட காவல் சூப்பிரண்டு அலுவலகத்தில் சசிகலா புஷ்பா எம்.பி. மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீது பாலியல் புகார் அளித்துள்ளார்.

அதன் பேரில் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பான விசாரணைக்காக சசிகலா புஷ்பா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சசிகலா புஷ்பா, அவருடைய கணவர், மகன், தோழி ஆகியோர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜர் ஆனார்கள்.

இந்த நிலையில் சசிகலா புஷ்பாவின் தாயார் கௌரி புதுக்கோட்டை காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜரானார். அவரிடம் காவல் இன்ஸ்பெக்டர் அன்னத்தாய் விசாரணை நடத்தினார்.

சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த விசாரணை வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டது.