சசிகலா புஷ்பா ராமசாமி திருமணம் நேற்று டெல்லியில் சிறப்பாக  நடைப்பெற்றது.இந்நிலையில் மறுநாளான இன்று நாடாளுமன்ற வளாகத்தில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்டார் சசிகலா புஷ்பா.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் திரண்டு போராடி வருகின்றனர்.கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். தூத்துக்குடி போராட்டத்தில் தன்னையும் இணைத்துக்கொள்ளும் வகையிலும்,தூத்துக்குடியை சேர்ந்தவர் என்ற முறையிலும், திருமணம் முடிந்த மறுநாளே ஸ்டெர்லைட்டுக்கு எதிராக பதாகை ஏந்தி சசிகலா புஷ்பா போராட்டத்தில் ஈடுபட்ட படம் வெளியாகி உள்ளது

ராமசாமியின் இரண்டாவது மனைவி  சத்யப்ரியா

ராமசாமி சசிகலா புஷ்பாவை மறுமணம் செய்ய உள்ள தகவல் வெளியானதும்,அவரது  இரண்டாவது மனைவி சத்யபிரியா,ராமசாமி மீது வழக்கு தொடர்ந்து, ராமசாமியின்  மறுமணத்திற்கு தடை வாங்கி இருந்தார்.ஆனாலும் தடையை மீறி நேற்று திருமணம் செய்தனர்.

2 ஆவது மனைவி மீது ராமசாமி புகார்

இந்நிலையில்,2-வது மனைவி சத்யபிரியா,என் முதல் மனைவியின் குழந்தையை அடித்து துன்புறுத்தினார். சத்யபிரியாவுடன் வரும் மணிகண்டன் என்பவர்தான் என் முதல் மனைவியின் குழந்தையை அடித்து துன்புறுத்தினர்

அதுமட்டும் இல்லாமல்,சத்யபிரியா தமது முதல் திருமணத்தை மறைத்துவிட்டு என்னை திருமணம் செய்துக்கொண்டனர், பிறகு சத்யபிரியாவிடம் இருந்து முறைப்படி விவாகரத்து பெற்றுவிட்டேன்.."என ராமாசாமி  தனது  இரண்டாவது மனைவியாக இருந்த சத்யபிரியா மீது  புகாரும் கொடுத்துள்ளார்.

சென்னை வருகிறது டெல்லி போலிஸ்

 இதனை தொடர்ந்து சத்யபிரியா மற்றும் மணிகண்டனிடம் விசாரணை நடத்த டெல்லி போலிஸ் நாளை சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம்  சத்யபிரியா முன்ஜாமீன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை முகநூல், வாட்ஸ் அப், வலைதளங்களில் நெட்டிசன்கள் எடுத்துப் போட்டு பாராட்டியும், விமர்சித்தும் பதிவிட்டு வருகின்றனர் என்பது  குறிப்பிடத்தக்கது.