sarathkumar house IT department raid more then 12 hours
தமிழ் சினிமாவில் நடித்துவரும் பிரபல நடிகரும், அரசியல் வாதியுமான சரத்குமார் வீட்டில் இன்று காலை 6 மணி முதல் வருமான வரி துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
அதே போல சசிகலா அணியான அம்மா அதிமுக அணியை சேர்ந்த அமைச்சர்கள் வீட்டிலும் இந்த சோதனை நடத்தப்பட்டு, பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சரத்குமார் வீட்டில் நடத்த பட்ட வருமான வரி துறை சோதனை மேலும் தீவிரமடைந்துள்ளது. காலை முதல் 8 அதிகாரிகள் மட்டுமே சோதனை செய்து வந்த நிலையில் தற்போது மேலும் 10 அதிகாரிகள் சோதனை செய்வதற்காக அவரது வீட்டிற்கு வந்துள்ளனர்.

தற்போது சரத்குமார் டிடிவி தினகரனுக்கு வாக்கு சேகரிப்பதற்காக தீவிர பிரச்சாரத்திற்கு சென்றுள்ளார் என்றும் அவருடைய வீட்டில் நடிகையும் சரத்குமாரின் மனைவியுமான ராதிகா மற்றும் அவரது மகன் மட்டுமே உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இதுவரை அவருடைய வீட்டில் என்ன பொருட்கள் கைப்பற்ற பட்டது என எந்த ஒரு செய்தியையும் அதிகாரிகள் வெளியிடாத நிலையில் மேலும் 10 அதிகாரிகள் அங்கு விரைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
