Asianet News TamilAsianet News Tamil

மனைவியுடன் தகராறு… தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர்… அதிர்ச்சியில் மாணவர்கள்…

தமிழகம் மட்டுமல்லாமல் தென்னிந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர் குடும்பத் தகராறில் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

sankar isa academu founder sankar sucide
Author
Chennai, First Published Oct 12, 2018, 8:37 AM IST

சென்னை அண்ணாநகர் சாந்தி காலனியில் சங்கர் ஐஏஎஸ் அகாடமி என்ற பெயரில் ஐஏஎஸ் பயிற்சி நடத்தி வந்தவர் சங்கர். திருச்செங்கோட்டை அடுத்த ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த சங்கர், சிறுவயதில் ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவில் மிதந்தவர். ஏழ்மை மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக அவரால் படிக்க முடியவில்லை.

தனது கனவுதான் நிறைவேறவில்லை, இளைஞர்களின் கனவுகளை நனவாக்குவோம் என்று எண்ணிய சங்கர், சென்னையில்  சங்கர் ஐஏஎஸ் அகாடமி என்ற பயிற்சி நிலையத்தைத் தொடங்கினார்

sankar isa academu founder sankar sucide

அவரது பள்ளியில் படித்த 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்போது இந்தியா முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகளாக பணிபுரிந்து வருகின்றனர். சென்னையில் மட்டுமல்லாமல் தென்னிந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் சங்கர் ஐஏஎஸ் அகாடமி தொடங்கப்பட்டது.

sankar isa academu founder sankar sucide

புதிய ஐஏஎஸ் அதிகாரிகளை உருவாக்குவதில் சங்கர் பெரு வெற்றி பெற்றார் என்றே சொல்ல வேண்டும்.. இந்நிலையில், தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சங்கர்  நேற்று இரவு தற்கொலை செய்துக்கொண்டாதாக கூறப்படுகிறது. இவருக்கு 2 பெண் குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

sankar isa academu founder sankar sucide

மாணவர்களிடம் பரிவுடன் பேசும் இயல்புடையவர் தன் திறமைமூலம் விரைவாக வளர்ந்தவர் சமூகநீதிக்காக அயராது குரல் கொடுத்தவர தமிழக மாணவர்கள் பலருக்கு ஐ.ஏ.எஸ் கனவு நனவாக பாடுபட்டவர் என சங்கர் குறித்து அவரது மாணவர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது சங்கரின் உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசுமருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

சங்கரின் மனைவி சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios