Asianet News TamilAsianet News Tamil

பழமையான சமணர் கோயிலில் 5 ஐம்பொன் சிலைகள் அபேஸ்!...

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சமணர் கோயிலில் வைக்கப்பட்டு இருந்த ஐம்பொன் சிலைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samanar Statues theft
Author
Tamil Nadu, First Published Sep 17, 2018, 3:39 PM IST

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சமணர் கோயிலில் வைக்கப்பட்டு இருந்த ஐம்பொன் சிலைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த பெரும்புகை பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த சமண மத கோயில் அமைந்துள்ளது. இங்கு சின்னையன் என்பவர் வேலை பார்க்கிறார். Samanar Statues theft

நேற்று இரவு கோயிலில் பூஜை முடிந்த்தும், சின்னையன் கோயிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை வழக்கம்போல் கோயிலுக்கு சென்றார். கோயிலை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்து, பல கோடி மதிப்புள்ள 5 ஐம்பொன் சிலைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். அதில், 2 மல்லநாதர் சிலைகள், 2 தர்நேந்திரர் சிலைகள், ஒரு நாகதேவதை சிலை ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. Samanar Statues theft

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கோயில் அருகில் உள்ள கட்டிடங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, மர்ம நபர்களின் உருவம் பதிவாகியுள்ளதா என விசாரிக்கின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios