salman khan tweeted that he got a girl for him

52 வயதான சல்மான் கானுக்கு பெண் கிடைத்துவிட்டது என,அவரே தனது ட்விட்டர்பக்கத்தில் பதிவிட்டு ஒரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்

பிரபல பாலிவுட் நடிகரான சல்மான் கானுக்கு தற்போது வயது 52.இனி இவருக்கு எப்போதுதான் திருமணம் நடைபெறுமோ என பலரும் எதிர்பார்க்கபப்பட்ட நிலையில், பெண் கிடைதுவிட்டது என்ற செய்தி, பரபரப்பை ஏற்படுத்திய தருணத்தில் உடனடியாக அடுத்த ட்வீட், சல்மான் கான் நடித்து அடுத்து வெளி வரும் படத்தை அலி அபாஸ் ஜாபர் என்பவர் இயக்குகிறார்.

இந்த படத்தில் நடிக்க பெண் கிடைத்துவிட்டதாக,பிறகு ட்வீட் செய்துள்ளார் சல்மான் கான்.இந்த படத்தில் ஆயுஷ் ஷர்மா நடிக்க உள்ளார் என்பது குறிபிடத்தக்கது.

ஐஸ்வர்யா ராய் முதற்கொண்டு கடைசியாக ரோமானிய நடிகை லுலியாவை திருமணம் செய்து கொண்டார் என்பது வரை எல்லாமே வதந்திகளாகவே போய் விட்டது. இன்றளவும் சல்மான் கான் யாரிடமும் சிக்க வில்லை என்றே கூறலாம்...