தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் பணி புரியும்  ஊழியர்களுக்கான ஊதியம் 2 ஆயிரத்து 300 ரூபாய் வரை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர்களுக்கான ஊதியம் 2 ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டு  அதாவது 7500 ரூபாயில் இருந்து 9,500 ரூபாயாக  உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விற்பனையாளர்களுக்கான சம்பளம் 1,900 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 7,500 ரூபாய் உயர்த்தப்படுவதாக தமிழக அரசின்  அறிக்கையில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

விற்பனை உதவியாளர்களுக்கு சம்பளம் 2,300 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 6,500 ரூபாய் நிர்ணயிக்‍கப்பட்டுள்ளது.

இந்த ஊதிய உயர்வு செப்டம்பர் மாதம் முதல் அமலுக்கு வரும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில்  டாஸ்மாக் ஊழியர்களுக்கான ஊக்கத்தொகை திட்டம் ஆகஸ்ட் மாதத்துடன் நிறுத்தப்படுவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 26-ஆம் தேதி நடைபெற்ற நிர்வாகக் குழு கூட்டத்தில் இம்முடிவுகள் எடுக்கப்பட்டதாக மண்டல மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் அனுப்பிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.