Sahayam IAS
நாட்டுக்கு உணவளித்து அனைத்து உயிர்களையும் காக்கும் விவசாயிகள் உயிர்வாழ முடியாமல் தற்கொலை செய்த கொள்வது இந்த நாட்டுக்கு எவ்வளவு பெரிய அவமானம் என ஐஏஎஸ் அதிகாரி சகாயம் கண்ணீர் மல்க தனது ஆதங்கத்தைத் தெரிவித்தார்.
தமிழகத்தில் கடும் வறட்சி காரணமாக இந்த ஆண்டு விவசாயம் பொய்த்துப் போனது. எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு வறட்சி நிலவி வருவதால் 200 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை கொண்டுள்ளனர்.
பயிர் செய்ய வாங்கிய கடைனை கட்ட முடியாமல் அவதிப்படும் விவசாயிகளை வங்கி அதிகாரிகள் மிரட்டுவதால் ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்த கொண்டனர். இந்த பிரச்சனைகளில் இருந்து விவசாயிகளை விடுவிக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
டெல்லியில் கடந்த 21 நாட்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர். ஆனால் அவர்களை ஆளும் பாஜக அரசு கண்டகொள்ளாமல் இருப்பது விவசாயிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்பிரச்சனை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஐஏஎஸ் அதிகாரி சகாயம், பயிர்கடனை கட்ட முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது இந்த நாட்டுக்கே மிகப் பெரிய தலைகுனிவு என தெரிவித்தார்.
இந்த நாட்டுக்கே உணவளித்துவரும் அவர்களை நாம் அனைவரும் ஒன்றினைந்து பாதுகாக்க வேண்டும் என சகாயம் தெரிவித்தார். இளைஞர்களும், மாணவர்களும் விவசாயிகள் பக்கம் இருக்க வேண்டம் என வலியுறுத்திய சகாயம், அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக போராட வேண்டும் என தெரிவித்தார்.
அறவழியில், சட்டத்திற்குட்பட்டு விவசாயிகளுக்காக இளைஞர்கள் போராடிவருவதில் எந்த தவறும் இல்லை என சகாயம் தெரிவித்தார்.
