Asianet News TamilAsianet News Tamil

கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் 6-வது நாளாக வேலை நிறுத்தம்; ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டதால் பரபரப்பு...

Rural postal workers strike for 6th day The protest
Rural postal workers strike for 6th day The protest
Author
First Published May 28, 2018, 8:05 AM IST


நாகப்பட்டினம்

கமலேஷ் சந்திரா கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்த கோரி கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் 6-வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்தனர்.

கிராமப்புற அஞ்சல் ஊழியர்களின் ஊதியக்குழு பரிந்துரைக்காக கமலேஷ் சந்திரா கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி நாகப்பட்டினம் மாவட்டத்தில் அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டம் 6-வது நாளாக நேற்றும் நீடித்தது. பணியைப் புறக்கணித்துவிட்டு கிராம அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகை தலைமை அஞ்சலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அஞ்சல் ஊழியர்கள் சங்கத் தலைவர் உதயகுமார் தலைமை தாங்கினார். 

இதில் 100-க்கும் மேற்பட்ட அஞ்சல் ஊழியர்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கையை நிறைவேற்ற கோரி முழக்கமிட்டனர்.


 

Follow Us:
Download App:
  • android
  • ios