Asianet News TamilAsianet News Tamil

கோயம்புத்தூரில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் உள்ளிருப்புப் போராட்டம்...

Rural Development Officers held in protest in Coimbatore
Rural Development Officers held in protest in Coimbatore
Author
First Published Apr 10, 2018, 7:54 AM IST


 
கோயம்புத்தூர்

கோயம்புத்தூரில் பொறியியலாளர் மீது தவறுதலாக நடவடிக்கை எடுத்தகாக கூறி 
ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம், ஊராட்சி செயலாளர்கள் நலச்சங்கம் மற்றும் பணி மேற்பார்வையாளர் சங்கத்தினர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் ஒன்றியத்தில் தனிநபர் கழிப்பிடத் திட்டத்தில் முறைகேடு நடந்ததாக கூறி பொறியியலாளர், வட்டார வளர்ச்சி அலுவலர், பணி மேற்பார்வையாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து ஊராட்சிச் செயலாளர்கள், மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீதும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முயற்சித்து வருகிறது. 

இதனைக் கண்டித்து பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, ஆனைமலை, கிணத்துக்கடவு, சுல்தான்பேட்டை ஆகிய ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம், ஊராட்சி செயலாளர்கள் நலச்சங்கம் மற்றும் பணி மேற்பார்வையாளர் சங்கத்தினர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள் பங்கேற்றனர்.

இதுகுறித்து ஊராட்சி செயலாளர்கள், "சூலூர் ஒன்றியத்தில் தனிநபர் கழிப்பிடத் திட்டத்தில் முறைகேடு நடந்ததாக தவறுதலாக வட்டார வளர்ச்சி அலுவலர், பொறியியலாளர், பணி மேற்பார்வையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக கோயம்புத்தூரில் நடந்த திட்ட அலுவலர் கூட்டத்தை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புறக்கணித்தனர். அதனைத் தொடர்ந்து தற்போது உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இன்று (அதாவது நேற்று) மாலை கோயம்புத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படவில்லை என்றால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்" என்று அவர்கள் கூறினர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios