Rs 80 crore fraud of Rs. Husband including husband and wife

திருப்பூர்

திருப்பூர் பனியன் நிறுவன தொழிலதிபரிடம் ரூ.80 கோடி மோசடி செய்த கணவன், மனைவி உள்பட ஆறு பேர் மீது காவலாளர்கள் வழக்குப்பதிந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், ஆண்டிப்பாளையம் வரத்தோட்டத்தைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (68). இவர் பனியன் நிறுவன தொழிலதிபர்.

இவர் தனது நண்பர்கள் சிவராமன், தனலட்சுமி, அவருடைய கணவர் துரைசாமி ஆகியோருடன் சேர்ந்து குள்ளேகௌண்டன்புதூரில் பனியன் ஏற்றுமதி நிறுவனம் நடத்தியுள்ளார். பனியன் நிறுவனத்தில் உள்ள நடவடிக்கைகள் அனைத்தையும் துரைசாமி கவனித்து வந்தாராம்.

இந்த நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் துரைசாமி தனது மனைவி மற்றும் மருமகன்களான சண்முகவடிவேல், மகேஷ், மேலாளர்கள் ராமராஜ், கண்ணன் ஆகியோருடன் சேர்ந்து வெங்கடாசலத்திற்கு தெரியாமல் அவர் பங்குதாரராக உள்ள பனியன் ஏற்றுமதி நிறுவனத்தின் பெயரிலேயே வேறொரு பனியன் ஏற்றுமதி நிறுவனத்தைத் தொடங்கி, அந்த நிறுவனத்தின் மூலமாக ஆடைகளை அனுப்பி வைத்து கோடிக் கணக்கில் பண மோசடி செய்துள்ளார்.

பின்னர், இதுகுறித்து வெங்கடாசலம் திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு காவலாளர்களிடம் புகார் அளித்தார். அதில், "துரைசாமி, அவருடைய மனைவி தனலட்சுமி, மருமகன்கள் சண்முகவடிவேல், மகேஷ் மற்றும் மேலாளர்கள் ராமராஜ், கண்ணன் ஆகியோர் கூட்டு சதி செய்து தான் பங்குதாரராக உள்ள நிறுவனத்தில் இருந்து ரூ.50 கோடி மதிப்புள்ள பனியன் ஆடைகளை விற்றும், வங்கி கணக்கில் இருந்த ரூ.30 கோடியை எடுத்தும் மோசடி செய்துள்ளனர்" என்று தெரிவித்திருந்தார்.

இந்த புகாரை ஏற்ற காவலாளர்கள் துரைசாமி, அவருடைய மனைவி தனலட்சுமி, மருமகன்கள் சண்முகவடிவேல், மகேஷ் மற்றும் மேலாளர்கள் ராமராஜ், கண்ணன் ஆகிய ஆறு பேர் மீதும் மோசடி வழக்குப்பதிவு செய்தனர். அவர்களிடம் விசாரணை நடைப்பெற்று வருகிறது.