அரியலூர் 

அரியலூரில் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ. 47 இலட்சம் மோசடி செய்த மேலாளரை மாவட்ட குற்றபிரிவு காவலாளர்கள் கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டம், செயங்கொண்டம் பேருந்து நிலையச் சாலையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் தாதம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த காளத்திபெருமாள் (29), கிளை மேலாளராக  கடந்த மூன்று ஆண்டுகளாக பணிபுரிந்தார்.  

இந்த நிலையில் மார்ச் மாதத்தையொட்டி நடைபெற்ற அலுவலகத் தணிக்கையின்போது அவர் போலி ஆவணங்களை பயன்படுத்தி பணம் கையாடல் செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து நிதி நிறுவன மண்டல மேலாளர் ஜெகன் காளத்திபெருமாள் ரூ. 47 இலட்சத்து 70 ஆயிரத்து 177  கையாடல் செய்ததாக  அளித்த புகாரின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சுமதி வழக்குப் பதிந்தார். 

அதன்பின்னர், காளத்திபெருமாளை கைது செய்து தற்போது அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகின்றது.