திருவண்ணாமலை அருகே வீடு புகுந்து பெண்களை தாக்கிவிட்டு நகையை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை டி.வலசு கிராமத்தை சேர்ந்தவர் ராமன். இவர் சென்னையில் கூலிவேலை செய்து வருகிறார். 

இவரது மனைவி அன்பரசி மற்றும் தாயார் கிராமத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இவர்கள் நேற்றிரவு கதவை திறந்து வைத்து தூங்கி கொண்டிருந்தனர். 

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர். சத்தம் கேட்டு சுதாரித்துக்கொண்டு எழுந்த வீட்டில் இருந்த அன்பரசியும் அவரது அத்தையையும் மர்ம நபர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். 

பின்னர், அவர்களது கழுத்தில் இருந்த 6 சவரன் நகையை பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

தகவலறிந்து வந்த வெறையூர் போலீசார் மோப்ப நாய்கள் உதவியுடன் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். 

மேலும் தலையில் படுகாயமடைந்த செந்தாமரையை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.