விழுப்புரம்

விழுப்புரத்தில் வீட்டின் கதவை உடைத்து அடாவடியாக உள்ளே புகுந்த கொள்ளையர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்த ஒன்றரை இலட்சம் மதிப்புள்ள நகைகளை திருடிக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர். 

villuppuram க்கான பட முடிவு

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருகேவுள்ளது ஓடைத்தாங்கல் கிராமம். இப்பகுதியில் வசிப்பவர் பரசுராமன் மகன் செல்வராஜ் (47). விவசாயியான இவர் நேற்று காலை வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்தோடு தனக்குச் சொந்தமான வயலுக்குச் சென்றார். 

விவசாயப் பணிகளை முடித்துக்கொண்டு செல்வராஜ் மற்றும் குடும்பத்தார் மாலைதான் வீட்டுக்குத் திரும்பினர். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியோடு செல்வராஜ் வீட்டுக்குள் சென்றார். அங்கு பீரோவின் பூட்டும் உடைக்கப்பட்டு இருந்தது. 

house broken theft க்கான பட முடிவு

அதிலிருந்த ஒன்றரை இலட்சம் மதிப்புள்ள 6 சவரன் நகைகள் மற்றும் 3000 ரூபாய் திருடுப் போயிருந்தது. பதறிப்போன செல்வராஜ் இதுகுறித்து காவல்துறைக்குத் தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு  விரைந்த அவலூர்பேட்டை காவலாளர்கள் வீட்டை பார்வையிட்டனர். 

பின்னர், செல்வராஜ் மற்றும் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர். "செல்வராஜ் மற்றும் குடும்பத்தார் வீட்டில் இல்லாததை தெரிந்துக்கொண்டு நகை, பணத்தை திருடியுள்ளனர்" என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

தொடர்புடைய படம்

இதுகுறித்து வழக்குப்பதிந்த காவலாளர்கள் கொள்ளையர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.